Thursday, September 30, 2010

மாய மான்.


வேழ முகத்தோனே, ஞானக் கொழுந்தனே,
கொம்பொடிந்த வலம்புரி நாயகனே,
உடற் நடுங்கி, இதழ் வரண்டு, கண்கள் சிவந்து,
சப்பரமேறிய நந்தி மகனே!


இருமை வாழ்க்கையற்ற சுத்த ஞானியையும்,
ஒளி மனம் திறந்த நிலையில் அற்புதங்கள்,
நிகழ்த்தும், அறிவு நுட்பம் வாய்ந்தோரையும்,
அகர, உகர, மகரம் இணைந்த 'ஓம் கார',
எண்ணத்தை அடை காத்து வெற்றி பெற்ற மகான்கள்,


ஏனையோரையும் படைத்து உலக நலம் காத்தோனே!
இன்றோ, மரபணுக் காய் கனிகளையும் படைத்து,
அழிவுப் பாதையைத் திறந்திடச் செய்ததினாலோ,
நீயும் கரைந்து மாயமாகிப் போனாயோ மாயவனே?


இன்று உலகம் அறிவியலில் முன்னேறிக் கொண்டிருக்கிற அளவிற்கு அதன் பக்க விளைவுகள் ஏற்படுத்துகிற பாதிப்புக்களுக்கும் குறைவில்லாமல் தான் இருக்கிறது. இயற்கை சீற்றம் ஏற்படுத்துகிற அழிவைக் காட்டிலும் மனிதன் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொள்கிற அழிவுகளின் பாதிப்புக்கள் சொல்லொனாதவை.

GM என்று சொல்லப் படுகிற மரபணுக் காய் கனிகளினால், பலவகையான உயிர்க்கொல்லி நோய்கள் பரவுவதை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். இது குறித்த விழிப்புணர்வு மிகவும் அவசியமான காலமிது........எச்சரிக்கை .............எச்சரிக்கை.....

கீழ்கண்ட தொடர்பில் உள்ள விடியோப் பதிவைக் கட்டாயமாகப் பாருங்கள். சற்றே அளவில் பெரிதாக உள்ள படியால் இதனை பதிவேற்ற இயலவில்லை அதனால், இந்த லிங்கைஅவசியம் க்ளிக் செய்து பாருங்கள்.

http://uk.video.yahoo.com/watch/4687000/12525766


15 comments:

  1. கண்டிப்பாக எல்லோருக்கும் விழிப்புணர்வு வர வேண்டும்.. நமக்கு என்ன என்று இருக்கக் கூடாது

    ReplyDelete
  2. ஆடியோ என்னன்னு கேட்கமுடியலைன்னாலும் காட்சிகளில் தெரிகிறது அந்த கொடுமைகளும், விபரீதங்களும்...

    நல்ல பகிர்வுங்க மேடம்.

    ReplyDelete
  3. பகிர்விற்கு நன்றி மேடம்.

    ReplyDelete
  4. மரபணுப் பிள்ளையார் கண்டுபிடிப்பாங்க வெயிட்டுங்க.

    ReplyDelete
  5. நன்றி பாலாசி, ஆடியோ என்ன பிரச்சனைன்னு தெரியலியே. என்க்கு நன்றாகத் தான் கேட்டது பாலாசி.

    ReplyDelete
  6. நன்றிம்மா வித்யா.

    ReplyDelete
  7. வானம்பாடி சார், நன்றிங்க.

    ReplyDelete
  8. நித்திலம்..என்ன விழிப்புணர்வு.யார் விழிப்பது ?விஞ்ஞான வளர்ச்சிக்குள் விழுந்துகொண்டிருப்பது விழிப்பைத் தேடும் நாங்கள்தானே.இனித்தான் காணொளி பார்க்கப்போகிறேன்.நன்றி.

    ReplyDelete
  9. அவசியமான பதிவு...பகிர்வுக்கு நன்றிங்க

    ReplyDelete
  10. //நன்றி பாலாசி, ஆடியோ என்ன பிரச்சனைன்னு தெரியலியே. என்க்கு நன்றாகத் தான் கேட்டது பாலாசி. //

    அலுவலகத்திலேயே பதிவுகளை படிப்பதனால் கேட்க முடியவில்லை என்று கூறினேன். நன்றி மேடம்.

    ReplyDelete
  11. ஓ, சரி பாலாசி, நன்றிங்க.

    ReplyDelete
  12. உங்கள் கருத்துக்காக தான் காத்து இருந்தேன் மிக்க நன்றி கீதப்பிரியன்

    ReplyDelete