Sunday, October 24, 2010

அகக் கண்கள் ...........



அகக் கண்கள் திறந்து...........
காட்சிகள் விரிகின்றன.
அழகான நீர் நிலையைக் காண்கிறேன்!
இரு புறமும் கொத்துக் கொத்தாக
மலர்கள் தாங்கிய குறுஞ்செடிகள்....

நீலமேகக் கூரையில்
வெண்பஞ்சுப் பொதிகள்....
வெளிர்நீல மலைக் குன்றுகளில்
பனிபடர்ந்த மரக் கன்றுகள்!

அந்தி மயங்கும் நேரம்.....
கூட்டில் அடையப் போகும்
பறவைகளின் மெல்லிய கீதம்.
மனம் அமைதியில் திளைத்த இன்பம்.

அந்த ஓடைக்கரையில் ஒரு
ஒரு குச்சு வீடு......
சின்ன அறையில் நிறைமனதுடன் நான்!
குச்சு வீட்டின் கொல்லைப்புறத்து
பசுமையான வயல் வெளி......
வளமையான பயிர்களின் நாணம்.....

கரையோரத்து மலர்களின் நறுமணம்
குடில்........அழகான குடில்......
எளிமையான மனிதரும்...
அழகான பறவைகளும்....
பகிர்ந்து வாழும் அழகிய குடில்....

குடிலின் அருகில் என் சொந்தங்கள் இல்லை.....
என் சாதி இல்லை......என் மதம் இல்லை....
என் இனம் கூட இல்லை.......
ஆனால் பெயர் மட்டுமே அடையாளமாக.....
அந்த இனம் அன்பை மட்டுமே ஆதாரமாக....

இயற்கையின் இனிமையைக்
கொண்டாடும் இனமாக........
அந்த அழகைப் பகிர்ந்து
பருகும் இனமாக......
திறந்த இதயத்துடன், பரந்த
மனதுடன் வாழும் இனம்....
அங்கு என் அமைதியான.......
ஆனந்தமான வாழ்க்கை...........

24 comments:

  1. நன்றிங்க ராமலஷ்மி.

    ReplyDelete
  2. இயற்கையோடு ஒன்றிய கவிதை..

    ReplyDelete
  3. சொந்தபந்ததை விட இயற்கையை நாம் நெருக்கமாக்கிகொள்வது எவ்வளவோ மேல்! நல்ல இருந்துச்சு!

    ReplyDelete
  4. நன்றிம்மா வித்யா.

    ReplyDelete
  5. நன்றிங்க தமிழரசி.

    ReplyDelete
  6. நன்றிங்க தமிழமிழ்தம்..

    ReplyDelete
  7. அருமையான நிறைவான வாழ்க்கை முத்து

    ReplyDelete
  8. ட்ரீம் லேண்ட்:)

    ReplyDelete
  9. //ஆனால் பெயர் மட்டுமே அடையாளமாக.....
    அந்த இனம் அன்பை மட்டுமே ஆதாரமாக....//

    அருமைங்க!

    ReplyDelete
  10. நன்றிங்க தேனம்மை.

    ReplyDelete
  11. நன்றிங்க எல்.கே. வானம்பாடிகள் சார்.

    ReplyDelete
  12. என்னாச்சு தமிழ்மண பட்டை?

    ReplyDelete
  13. ஜோதிஜி சார், நன்றிங்க . தமிழ்மண பட்டை சில நேரங்கள் சரியாக வருவதில்லை....காரணமும் தெரியவில்லை...வேறு சிலர் பிளாகில் கூட இப்படி ஆகிறது.என்ன செய்வது என்றுதான் தெரியவில்லை.

    ReplyDelete
  14. ஆசியா, மனோ இருவருக்கும் நன்றி.

    ReplyDelete
  15. நீலமேகக் கூரையில்
    வெண்பஞ்சுப் பொதிகள்....
    வெளிர்நீல மலைக் குன்றுகளில்
    பனிபடர்ந்த மரக் கன்றுகள்!


    .....கொள்ளை அழகை கொட்டி காட்டும் கவிதை.

    ReplyDelete
  16. நன்றிங்க கீதா.வருக....

    ReplyDelete
  17. கவிதை நல்லா இருக்குங்க சகோ

    ReplyDelete