Thursday, October 21, 2010

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் - பாகம் - 6 .


உடன்பிறப்புக்களே, நேற்று இட்ட இடுகையின் தொடர்ச்சிதான் இது. பல நட்பூக்களின் விருப்பத்திற்கிணங்க இந்த உப்புமா ரெசிப்பியின் அடுத்த பாகமும் வழங்கியிருக்கிறேன்.

* பாசிப்பருப்பு உப்புமா :

தேவையானப் பொருட்கள் :

1 கப் பாசிப் பருப்பு.
1 டே. ஸ்பூன் எண்ணெய்
1 டே. ஸ்பூன் நெய் அல்லது வெண்ணெய்.
ஒரு கொத்து கருவேப்பிலை.
2 டே. ஸ்பூன் நிலக்கடலை
2 டே. ஸ்பூன் பச்சை பட்டாணி
உப்பு தேவைக்கேற்ப.
1 டி.ஸ்பூன் கடுகு
1/2 டி.ஸ்பூன் சீரகம்
2 -3 பச்சை மிளகாய்
1 எலுமிச்சை பழம்
1 தக்காளி
1 வெங்காயம்
1 கேரட்
2 -3 சிகப்பு வர மிளகாய்

செய்முறை :

பருப்பை வறுத்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், கடுகு, நறுக்கிய வெங்காயம், பச்சை பட்டாணி போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

3 கப் தண்ணீர் சேர்க்கவும். அதில் உப்பு, சிகப்பு மிளகாய் கிள்ளியது, மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சேர்க்கவும். கொதி வந்தவுடன் தீ
யைக் குறைக்கவும்.

அதில் பருப்பு, நிலக்கடலை, நறுக்கிய தக்காளி மற்றும் கருவேப்பிலை சேர்க்கவும். தண்ணீர் வற்றும் வரை கிளறி விடவும்.

எலுமிச்சை சாறையும், நெய்யும் சேர்த்து கிளறி 10 நிமிடம் சிறி தீயில் மூடி வைத்து இறக்கவும்.

துறுவிய கேரட், தக்காளி, கொத்தமல்லி, பச்சை மிளகாய் அலங்கரித்து பறிமாறவும்... பிரட் உப்புமா :தேவையான பொருட்கள் :

2 கப் ரொட்டித்தூள்.[ Breadcrumbs]
3/4
கப் தண்ணீர்
1 வெங்காயம் [ பெரிய சதுரமாக வெட்டியது]
2 பச்சை மிளகாய் [ நறுக்கியது]
1/2 கப் நிலக்கடலை [வறுத்தது ]
1/2 டி.ஸ்பூன் கடுகு
கருவேப்பிலை சிறிது.
2 டே.ஸ்பூன் சமையல் எண்ணெய்
1/2 ஸ்பூன் மிளகாய் பொடி
கொத்தமல்லி அலங்கரிக்க.

செய்முறை :

எண்ணெய் இல்லாமல் ரொட்டித் தூளை மிதமாக வறுக்கவும். கடாயில் எண்ணெய் விடவும். கடுகு போட்டு அது பொரிந்தவுடன் கருவேப்பிலை போடவும். வெங்காயமும், பச்சை மிளகாயும் சேர்க்கவும். நன்கு வதக்கவும். ரொட்டித்தூளைப் போட்டு தண்ணீரும் ஊற்றவும். நன்கு கிளறி நிலக்கடலையும் சேர்க்கவும். 1 நிமிடம் மூடி வைக்கவும். கீழே இறக்கி விடவும். கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும். சூடாகப் பறிமாறவும். .

13 comments:

  1. அருமை... நன்றிங்க.

    ReplyDelete
  2. உப்புமாவையே இவ்ளோ ருசியா செய்யமுடியுமா?? ஜூப்பர் :-)))

    ReplyDelete
  3. நன்றிங்க அமைதிச்சாரல்.

    ReplyDelete
  4. ம்ம்... காப்பி பண்ணிக்கறேன்..

    ReplyDelete
  5. இத்தனைநாள் என் கண்ணில் படாத வலைப்பூ...இனி தொடர்ந்து வருகிறேன்..
    உப்புமா செய்து பார்த்துச் சொல்கிறேன்

    ReplyDelete
  6. வருக...வருக....கோமா.நன்றி.

    ReplyDelete
  7. நன்றிம்மா பிரியா.

    ReplyDelete
  8. நன்றிங்க தமிழமிழ்தம்.

    ReplyDelete
  9. Looks delicious!!
    Do drop by
    http://www.padhuskitchen.com
    when u find time

    ReplyDelete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...