Sunday, October 17, 2010

எத்துனை கோடி இன்பம்................


தொடர்ந்த ஏமாற்றங்கள்......
மனம் நொந்து நிந்தித்தேன்.

சுயத்தைத் தீண்டியச் சோதனைகள்...........
உன் தோற்றத்தை பரிசோதித்தேன்.

வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களை உணரச் செய்தாய்.....
உன்னை வெறுக்கவும் முயற்சித்தேன்.

உன் உதார குணத்தையே சந்தேகித்தேன்.......
இரக்கமற்ற அரக்கன் என நிந்தித்தேன்.

மாற்று உபாயம் தேடி சிந்தித்தேன்.......
மன வலிமையை வளர்த்தேன்.


வாழ்க்கைப் போராட்டத்தைக் கையாளும் கலையைக் கற்றேன்........
சீற்றத்திலிருந்து மீண்டுவரும் தெளிவும் பெற்றேன்.

அமைதியின் பாதையைக் கண்டறியும் சக்தி கிடைத்தது.......
இயற்கை அன்னையின் உன்னதத்தை உணர்ந்தேன்.

இன்ப மணத்தைக் கொடுத்த அவளேதான்
துன்பச் சுமையும் சுமக்கச் செய்கிறாள்.

முள்ளோடு தோன்றும் மலரின் மகிமையை உணர்ந்தேன்......
முள் தீண்டாமல் மலர் பறிக்கும் ஆற்றலும் பெற்றேன்.

இருளைப் படைத்தாய் ஒளியை உணர......
வெறுமையைப் படைத்தாய் இறைமையை உணர.

வறண்ட பாலைவனம் படைத்தாய்.....
பாலைவனச் சோலையும் படைத்தாய்.

படைப்பின் இலக்கணம் உணரச் செய்தாய்!
பண்படுத்தி எனை வழி நடத்தினாய் கச்சியே கம்பனே!

30 comments:

  1. இருளைப் படைத்தாய்
    ஒளியை உணர......
    வெறுமையைப் படைத்தாய்
    இறைமையை உணர.//

    அருமையான வரிகள்.

    தங்களின் வரிகளை நான் உடைத்துபோட்டுள்ளேன்.அதாவாது நீண்டவரிகளை பிரித்து எழுதியுள்ளேன்.அப்பொழுது அதன் ஓசை வெளிப்படுமென்று..
    தவறெனில் பொருந்திக்கொள்ளவும்.


    http://niroodai.blogspot.com/

    ReplyDelete
  2. நன்றிங்க. இதுவும் நன்றாகவே இருக்கிறது.தவறில்லை.

    ReplyDelete
  3. முள்ளோடு தோன்றும் மலரின் மகிமையை உணர்ந்தேன்......
    முள் தீண்டாமல் மலர் பறிக்கும் ஆற்றலும் பெற்றேன்.//

    மிக அருமை நித்திலம்..

    ReplyDelete
  4. இருளைப் படைத்தாய் ஒளியை உணர......
    வெறுமையைப் படைத்தாய் இறைமையை உணர.


    .....கருத்துடன் இந்த கவிதை, மிளிர்கிறது. பாராட்டுக்கள்!

    ReplyDelete
  5. அருமை,எளிமை.. நித்திலம்..
    //முள்ளோடு தோன்றும் மலரின் மகிமையை உணர்ந்தேன்......
    முள் தீண்டாமல் மலர் பறிக்கும் ஆற்றலும் பெற்றேன்.////// முழுமையும் ரசித்தேன் இந்த இடம் எனக்கு மிகவும் பிடித்தது..

    ReplyDelete
  6. கவிதை நன்றாக உள்ளது.

    ReplyDelete
  7. நன்றிங்க தேனம்மை.

    ReplyDelete
  8. நன்றிங்க சித்ரா, முத்துலெட்சுமி, அம்பிகா.மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  9. padaithalae inbam atharkinbam ungalai pola or pulavar athai kavithaiyai padaika perin!!!! (activeX not working sorry!)

    ReplyDelete
  10. //இன்ப மணத்தைக் கொடுத்த அவளேதான்
    துன்பச் சுமையும் சுமக்கச் செய்கிறாள்.//

    கவிதை கலக்கல்...

    ReplyDelete
  11. வானம்பாடிகள் சார், T.V.R.சார், மிக்க ந்ன்றி.

    ReplyDelete
  12. தமிழமிழ்தம், சங்கவி சார், நன்றி.

    ReplyDelete
  13. ரொம்ப அருமையா இருக்கு, மலிக்கா சொன்ன மாதிரி கொஞ்சம் வரிகளை உடைத்து எழுதினால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  14. //முள்ளோடு தோன்றும் மலரின் மகிமையை உணர்ந்தேன்......
    முள் தீண்டாமல் மலர் பறிக்கும் ஆற்றலும் பெற்றேன்.

    இருளைப் படைத்தாய் ஒளியை உணர......
    வெறுமையைப் படைத்தாய் இறைமையை உணர.//

    அற்புதமான வரிகள். அருமையான கவிதை.

    ReplyDelete
  15. நன்றிங்க ராமலஷ்மி.

    ReplyDelete
  16. மிக அருமை.கவிதையில் உணர்வை நாகரீகமாக வெளிப்படுத்தியிருப்பது அருமையிலும் அருமை.

    ReplyDelete
  17. படிக்கும் வரை நானும் தெளிந்தேன்...கொஞ்ச நேரம் வரை தெளிந்தே இருந்தால் நான் திருந்தியதா நினைக்கிறேன்..கவிதை என்று பார்த்தால் நல்ல அறிவுரை என்றே கொள்வேன்

    ReplyDelete
  18. நன்றிங்க தமிழரசி.

    ReplyDelete
  19. ரசித்து படித்தேன்
    வாழ்க வளமுடன்
    அன்புடன்
    நெல்லை பெ. நடேசன்
    துபாய்
    அமீரகம்

    ReplyDelete
  20. மிகவும் அருமையாக உள்ளது உங்கள் வரிகள்.

    ReplyDelete
  21. நன்றிங்க நடேசன் அவர்களே. வருக வணக்கம்.

    ReplyDelete
  22. AT.Max நன்றிங்க .வருக.....வணக்கம்.

    ReplyDelete
  23. ///முள்ளோடு தோன்றும் மலரின் மகிமையை உணர்ந்தேன்......
    முள் தீண்டாமல் மலர் பறிக்கும் ஆற்றலும் பெற்றேன்///

    அருமையான வரிகள்...
    கலக்குறீங்க.. வாழ்த்துக்கள்.. :-))

    ReplyDelete
  24. நன்றிங்க ஆனந்தி. வருக, வணக்கம்.

    ReplyDelete
  25. //கச்சியே கம்பனே//

    அப்போ கம்பனை கடவுள்ன்றீங்க ரைட்டு...!

    ReplyDelete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...