Sunday, November 14, 2010

தொடரும் நினைவுகள்!




நான் இறக்கப் போகிறேன்
என் கூடு கலைந்து போனது
என் குஞ்சுகள் நசுங்கி போயின
என் இணை இன்னுயிர் ஈந்தது.

அழகான குடையாக விரிந்த பச்சை மரம்
செம்மலர் நிறைந்த பரந்து விரிந்த கிளைகள்
அதில் அன்னிய புட்டங்களின் அஞ்ஞாத வாசம்
இன்பமாய் கொஞ்சிக் குலவிய இனிய நேரம்

வழமையாய் உண்டு, உறங்கி, களைப்பாறி
புதிதாய்ப் பிறந்து எழுந்து வெளியேறி
இணையை குஞ்சுகளுக்கு காவலாக்கி
இறை தேடி இறகு விரித்து மலையேறி

அந்தி மயங்கும் பொன்மாலை வேளை
இறையோடு இருப்பிடம் நாடி
குஞ்சுகளையும், இணையையும் தேடி
ஓடி, ஓடி களைத்து இறக்கப் போகிறேன்!

குடியிருந்த குச்சு வீடும் காணவில்லை
கூடு இருந்த சுவடும் இல்லை
கொஞ்சிக் குலாவ குஞ்சுகளும் இல்லை
அள்ளி அணைக்க இணையும் இல்லை.

அழைப்பு மணியோசை இடியெனத்தாக்க
நெஞ்சுக்கூடு விம்மி தெறிக்க
வியர்வை வெள்ளம் ஆறாய்ப்பெருக
இறக்கப் போகிறேனா நான் ?

ஆயிரத்து ஒன்னாம் முறையாக வந்த சொப்பனம்!
உலுக்கி எடுத்து அழைக்கும் தர்மபத்தினி
மரம்வெட்டியின் நாராசமான அழைப்பு
பகல் சொப்பனம் பலிக்காவிட்டாலும்
இன்னுமொரு பாபக் கணக்கா..........ஐயோ வேண்டாமே!

மரங்கள் வளர்ப்போம்!!
வனத்தைக் காப்போம்!!

17 comments:

  1. அற்புதம். வேறொன்றும் எழுதத்தோன்றவில்லை.

    ReplyDelete
  2. மிக்க நன்றி. ஜோதிஜி.....அனுப்பிக்கொண்டிருந்தேன்......

    ReplyDelete
  3. மனித வாழ்வோடு குருவியின் வாழ்க்கையை முடிச்சிட்டு...முடிவில் தாவர வர்க்கம் காக்கும் உங்கள் மனதுக்கு இனிய வணக்கம். அருமையாய் யோசித்து எழுதப்பட்டுள்ளது. வருகை தாருங்கள்.... ( ithayasaaral.blogspot.com )

    ReplyDelete
  4. சொல்லிக்கொண்டேயிருக்கிறோம்...ஆனால் அதே தப்பைச் செய்துகொண்டே !

    ReplyDelete
  5. மிகவும் அருமைங்க நித்திலம்.

    ReplyDelete
  6. நல்லாருக்குங்க கவிதை.

    ReplyDelete
  7. நன்றிம்மா வித்யா.

    ReplyDelete
  8. நன்றி அருண் பிரசாத்.

    ReplyDelete
  9. நன்றிங்க தமிழ் காதலரே.கட்டாயமாக வருகிறேன்.

    ReplyDelete
  10. நன்றிங்க ராமலஷ்மி.

    ReplyDelete
  11. வானம்பாடிகள் சார் நன்றிங்க.

    ReplyDelete
  12. //மரங்கள் வளர்ப்போம்!!
    வனத்தைக் காப்போம்!!
    //

    செய்வோம்

    நல்ல கருத்துள்ள கவிதை

    ReplyDelete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...