Thursday, November 18, 2010

மணமும்.........மனிதமும்.
திருமணம் என்றாலே பல லட்சங்கள் செலவு செய்து அதில் பல ஆயிரங்கள் விரயம் ஆவது, இப்படி வழமையாக நடந்து கொண்டிருந்தாலும், இன்று மக்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வு உண்டாகி இருப்பதும் பாராட்டுக்குரிய விடயமாகும்.

இன்று ஈரோடை மாநகரில், குருசாமி கவுண்டர் திருமண மண்டபத்தில் ஒரு திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. வெகு விமரிசையாக நடந்த அந்த திருமண மண்டபத்தில் ஒரு ஆச்சரியமான விடயமும் நடந்தது. பொதுவாக திருமணம் முடிந்தவுடன் தாம்பூலப்பையில், தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு இப்படி ஏதாவது போட்டுக் கொடுப்பதுதான் வழக்கம். ஆனால் இந்த திருமணத்தில் வித்தியாசமாக மரக்கன்றுகள், தாம்பூலப்பையில் போட்டு அனைவருக்கும் கொடுத்தார்கள். சராசரியாக 1000 தாம்பூலப்பைகள். ஒரு பையில் 2 அல்லது 3 மரக்கன்றுகள்.ஈரோடு, குமாரபளையம் SSM பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்
திரு முத்துசாமி அவர்கள் தன் மகன் திருமணத்தில்தான் கொடுத்துள்ளார். இது பற்றி, சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆர்வலரான, அவரிடம் கேட்டபோது, “ மக்களிடம் மரம் வளர்க்கும் ஆர்வத்தை அதிகரிப்பதுடன், இன்று சுமாராக 2500 மரக்கன்றுகள் [ மலை வேம்பு, குமிள் தேக்கு, நாவல் மரம் ] மற்றும் மகிழம்பூ, மல்லி, செண்பகம் போன்ற பூச்செடிக் கன்றுகள் ஆகியவைகள் கொடுத்துள்ளோம். இத்தனைக் கன்றுகளையும் இன்று ஊர் முழுவதும் அவரவர் இல்லங்களில் வைக்கும் போது, ஊர் பசுமையாவதுடன், மரம், செடிகள் வளர, வளர, கரியமல வாய்வினால் ஏற்படக்கூடிய மாசு கட்டுப்படுவதுடன், மரங்களைக் காணும் போதும் அதன் குளிர்ச்சியை அனுபவிக்கும் போதும், தங்கள் நினைவும் அவர்களுக்கு பசுமையாக இருப்பதுடன், மனதார வாழ்த்தவும் செய்வார்களே. இவ்வரிய திட்டம் செயல்படுத்துவதற்கு முழு காரணம் கவிந்தப்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் PG. Asst. ஆக இருக்கும் தம் மனைவி யசோதாதான் “, என்கிறார் பெருமை பொங்க. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த தம் மகள் திருமணத்திலும் இது போல் 3200 மரக்கன்றுகள் அவர்கள் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

22 comments:

 1. ஊக்குவிக்கப் படவேண்டிய முயற்சி:)

  ReplyDelete
 2. மிக அருமையான நிகழ்ச்சி. பகிர்ந்த உங்களுக்கும் மரக்கன்றுகள் கொடுத்த குமாரபளையம் SSM பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்
  திரு முத்துசாமி அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்ததுக்கள். உங்கள் பனி மேலும் தொடரட்டும்

  ReplyDelete
 3. பகிர்வுக்கு நன்றி

  பாராட்டுகள் அவருக்கு

  ReplyDelete
 4. நன்றி வானம்பாடிகள் சார்.

  ReplyDelete
 5. நன்றிங்க வேலு சார்.

  ReplyDelete
 6. அருண் பிரசாத் நன்றி.

  ReplyDelete
 7. நல்ல யோசனையாயிருக்கே..

  ReplyDelete
 8. சமீபமா இப்படி நிறைய கல்யாணங்களில் கொடுக்குறாங்க...

  கொடுக்கப் படும் செடிகளில் எவ்வளவு நடப்படுகிறது என்பதுதான் தெரியவில்லை!

  ReplyDelete
 9. பகிர்விற்கு மிக்க நன்றி, இது போன்ற நிகழ்ச்சிகள் மற்றவர்க்கு எடுத்துக்காட்டாக அமையும்

  எங்கோ ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் ஒரு மரம் வளர்க்க அக்கல்லூரி வளாகத்தில் இடம் ஒதுக்கியுள்ளதாக அறிந்தேன்

  மலரட்டும் மனிதம்

  ReplyDelete
 10. வித்தியாசமா இருக்கு.ஆனா நல்ல விஷயம் !

  ReplyDelete
 11. நல்ல முயற்சி.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. இப்போதெல்லாம் இது பரவலாக நடக்க ஆரம்பித்து விட்டது. நல்ல முயற்சி. நாடெங்கும் பசுமை செழிக்க வாழ்த்துக்கள். விவசாயத்துறையை வைத்துக் கொண்டு சுயசம்பாத்தியம் பார்க்கும் சொறிநாய்கள் திருந்தினால் நாம் இன்னும் செழிப்படைவோம் என்பதில் சந்தேகமில்லை.

  ReplyDelete
 13. வாவ்... அருமையான ஐடியா..

  ||ஈரோடு கதிர் said...
  சமீபமா இப்படி நிறைய கல்யாணங்களில் கொடுக்குறாங்க...

  கொடுக்கப் படும் செடிகளில் எவ்வளவு நடப்படுகிறது என்பதுதான் தெரியவில்லை!||

  ஹூம்..

  ReplyDelete
 14. நடப்படுகிறதோ இல்லையோ .. சிலரின் மனதில் இந்த விசயம் நடப்படுகிறதே
  நல்லமுயற்சி
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 15. நன்றிங்க கதிர், பயணமும், எண்ணங்களும், மார்க்கண்டேயன்.

  ReplyDelete
 16. வாவ்... அருமையான ஐடியா..........ப்ரியா, நல்லதும்மா........தொடர்ந்து சொல்லுங்க......

  ReplyDelete
 17. நன்றிங்க முத்துலட்சுமி, சரியாகச் சொன்னீர்கள்.

  ReplyDelete
 18. தாரிஸன் வருக....வணக்கம்.

  ReplyDelete
 19. நன்றிங்க தமிழ்க்காதலன்.

  ReplyDelete
 20. தாங்கள் இப்பதிவில் குறிப்பிட்ட "மணவிழாவில் மரகன்று வழங்குவதை" .... சுமார் இரு வருடங்களுக்கு முன் சென்னை மாநகர மேயர் மகன் திருமணத்தில் வந்த சுமார் 4000க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது...! அதுதான் நான் முதன்முதலில் கண்டது...

  ReplyDelete