நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் - பாகம் :8


குறைந்த கலோரி சோயா

தேவையான பொருட்கள் :

* சோயா துகள்கள் (soya flakes) - 1 கிண்ணம்

* தக்காளி பேஸ்ட் - 2 டே.ஸ்பூன்

* இஞ்சி பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்

* பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1

* வர மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்

* உப்பு தேவைக்கேற்ப.

* எண்ணெய் - 1 1/2 ஸ்பூன்

செய் முறை :

1. சோயா துகள்களை முதலில் சூடான நீரில் 5 நிமிடம் ஊற்வைத்து, அதை திரும்பவும் இரண்டு, மூன்று முறை தண்ணீரில் அலசிப் பிழிந்து வைத்துக் கொள்ளவும்.

2. ஒரு வாணலியில் 11/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு, அதில் இஞ்சி பூண்டு விழுது போடவும்.

3. ஒரு நிமிடம் வதங்கிய பின்பு அதில் வெங்காயம் போட்டு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.

4. அதில் தக்காளி பேஸ்ட் , வர மிளகாய் தூள், உப்பு போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.

5. தண்ணீர் அரை கிண்ணம் ஊற்றி, அத்துடன் பிழிந்து வைத்திருக்கும் சோயா துகள்களைப் போட்டு, சிறு தனலில் 5 நிமிடம் மூடி வைக்கவும்.

6. கொத்தமல்லி இலைகள் சிறிதளவு பொடியாக நறுக்கி தேயையானால் சேர்க்கலாம். நன்கு நீர் வற்றியவுடன் இறக்கி வைத்துக் கொள்ளாவும்.

இது ரொட்டி சேண்ட்விச் அல்லது ஸ்ட்பஃட் பரோட்டா (stuffed parottah) போன்றவற்றிற்கும் அரிசி சாதத்திற்கும் நல்ல பொருத்தமானதாக இருக்கும்.Comments

  1. ஒரு துரிதமான சத்தான உணவு.நன்றி நித்திலம் !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

உறுமீன்

யானைக்கும் அடி சறுக்கும்.............

கண்ணதாசனின் ‘சேரமான் காதலி'