பகிர்தல்


சுகமான நினைவலைகள்
தென்றலாய் வீசும்.
கனமான நினைவலைகள்
கனிவான கதைகள் பேசும்
மணமான நினைவலைகள்
மங்கலமாய் மணக்கும்.
துயரமான நினைவலைகள்
சுகமான சுமையாகும்.
பதின்மத்தின் நினைவலைகள்
பசுமரத்தானியாய் பதியச் செய்யும்.
கோழைத்தனமான நினைவலைகள்
துணிச்சலாய் துள்ளச் செய்யும்.
துவண்டு போன நினைவலைகள்
நம்பிக்கையூட்டி நிமிரச் செய்யும்.
பரிதவிக்கச் செய்த நினைவலைகள்
பக்குவமாய் பரிசீலிக்கப்படும்.

பகிரும் மனமும் பகிரப்படும் இடமும்
பாந்தமாய் பொருந்தியிருந்தால்
வாழ்க்கையின் பாரமும் அழுத்தாது
வேதனையும் மண்ணில் வீழ்த்தாது
சோதனையும் தூசாய் பறந்துவிடும்!

Comments

 1. பகிர்தலின் சிறப்பை மிக அழகாகப் பகிர்ந்து போகும்
  பதிவு அருமையிலும் அருமை
  தொடர வாழ்த்துக்கள்
  த.ம 1

  ReplyDelete
 2. நனி நன்றி நண்பரே. வருக, வருக, வணக்கம். நல்லன நாளும் மலர வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. நன்றி நண்பர் தெகா.வாருங்கள், வணக்கம். நல்லன நாளும் மலர வாழ்த்துகள்.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

உறுமீன்

யானைக்கும் அடி சறுக்கும்.............

கண்ணதாசனின் ‘சேரமான் காதலி'