Saturday, August 25, 2012

மழைக்கு சூடா.......

ஆமாங்கோவ்.... எங்கூர்ல செம மழைங்கோவ்... அதான் சூடா......

மக்களே ரொம்ப நாளைக்கப்பறம் ஒரு ரெசிப்பி போடறேன்.... டேஸ்ட் செய்து பாருங்கள்...


சில்லி கோபி

கோபி மஞ்சூரியன்


தேவையான பொருள்கள்

காலிஃப்ளவர் – மீடியம் (350 கிராம்)

பெரிய வெங்காயம் – 250 கிராம்.

தக்காளி – 150 கிராம்

குடை மிளகாய் - 1 சிறியது

சில்லி சாஸ் – 1 ஸ்பூன்

சோயா சாஸ் – 1 1/2 ஸ்பூன்

அஜினோ மோட்டோ – சிறிதளவு

முட்டை - 1 (தேவையென்றால்)

இஞ்சி , பூண்டு விழுது - 1ஸ்பூன்

எண்ணை – 100 கிராம்.

ரெட் கலர் – 1 துளி

மைதா – 10 கிராம்

உப்பு – தேவையான அளவு

பச்சை மிளகாய் – தேவையானால்

செய்முறை:

1. காலிஃப்ளவரை சுத்தம் செய்து ஒவ்வொரு பூவாக பிரித்து எடுத்து தண்ணீர் இல்லாமல் துடைத்து வைத்துக் கொள்ளவும்.

2. முட்டையை அடித்து அதில் மைதா, அஜினா மோட்டோ, உப்பு, சில்லி சாஸ், சோயா சாஸ் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ள்வும்.

3. இஞ்சி பூண்டு கலவையுடன் மைதா கலவையையும் காலிஃப்ளவர் பூவையும் சேர்த்து பிரட்டி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

4. வாணலியில் எண்ணை வைத்து பொறித்து எடுக்கவும்.

இது சில்லி கோபி.

சிறிது பெரிய வெங்காயத்தை நேர்வாக்கில் அரிந்து எடுத்துக் கொண்டு, மீதி இருக்கும் வெங்காயத்தையும் தக்காளியையும் நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும். சிறிது எண்ணையை வாணலியில் ஊற்றி சூடான பின் அரிந்து வைத்துள்ள வெங்காயத்தை அதில் போட்டு நன்றாக சிவக்கும் வரை வதக்கவும்.

பின்னர் அதனுடன் குடை மிளகாய் போட்டு வதக்கி, பொறித்த காலிஃப்ளவர் அரைத்த விழுது, அனைத்தையும் வாணலில் போட்டு நன்றாக வேக வைக்கவும். தேவையானால் சிறிது தண்ணீரும் காரத்திற்கு பச்சை மிளகாயை நேர்வாக்கில் அரிந்து சேர்த்துக் கொள்ளலாம். தேவையான அளவிற்கு ஸாஸ், உப்பு சேர்த்து நன்றாக வெந்தபின் இளம் சூட்டோடு எடுத்து பரிமாறலாம். இறுதியாக வெங்காயத்தாள் அல்லது கொத்தமல்லி சேர்க்கலாம்.
இதுவே கோபி மஞ்சூரியன்

6 comments:

  1. அருமையான குறிப்பு பவளா. நன்றி.

    ReplyDelete
  2. ம்ம்....சுலபமா சமைச்சிடலாம் போல இருக்கே.செய்து பாத்திட்டு சொல்றேன் !

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஹேமா.. நலமா. அவசியம் செய்து பாருங்க...

      அன்புடன்
      பவளா

      Delete
  3. Replies
    1. அடடா... கண்டுபிடிச்சிட்டீங்களே..... அஜினோ மோட்டோ.. ஸ்பெல்லிங்க் மிஷ்டேக்கு..திருத்திட்டேன்.. மழை அதிகமா.. நடுங்கிக்கிட்டே போட்டனா.. ஒரு கொம்பு மிஸ்ஸிங்..


      அன்புடன்
      பவளா

      Delete
  4. ராமலஷ்மி டிரை பண்ணுங்க, நல்லாயிருக்கும் நிச்சயமா..

    அன்புடன்
    பவளா

    ReplyDelete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...