Saturday, August 25, 2012

காலிபிளவர் டிக்கா


எங்கம்மா சொல்லிக் கொடுத்த ரெசிப்பியாக்கும்! நீங்களும் சுவைத்துப் பாருங்களேன்.....


காலிபிளவர் டிக்கா

தேவையான பொருட்கள்

காலிஃப்ளவர்-1 (ஒரேஅளவாக 12 துண்டுகளாக்கிக் கொள்ளவும்)

கெட்டியான தயிர்-1/2 கப்

கரம் மசாலாப் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்

அரிசி மாவு -1 டேபிள் ஸ்பூன்

கடலை மாவு -1 டேபிள் ஸ்பூன்

மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

1.கெட்டியான தயிரை ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளவும். அதில் கரம் மசாலாப் பவுடர், இஞ்சி பூண்டு விழுது, அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள், உப்பு முதலியவற்றைக் கலந்து கொள்ளவும்.

2.இந்தக் கலவையில் காலிபிளவரை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

3.தந்தூர் ஓவனைச் சிறிது நேரம் சூடுபடுத்திய பின் ஸ்கீவரில் காலிபிளவரை 1 இன்ச் தள்ளித் தள்ளி அடுக்கி வைத்து 10 நிமிடம் கிரில் செய்யவும். ஸ்கீவெரை எப்போதும் போல் சுற்றி விடவும். இப்போது சூடாகக் காலிபிளவரைக் கொத்தமல்லித் தழை தூவி சாஸுடன் பரிமாறவும்.

6 comments:

  1. சுவையான டிக்காவுக்கு சூப்பர் ரெஸிபி.

    ReplyDelete
  2. காலிபிளவர் டிக்கா -சுவையான புதுமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  3. இப்பத்தான் இன்னொரு பதிவில் (சாப்பிடலாம் வாங்க) காலிபிளவர் பஜ்ஜி ரெசிபி பார்த்து செய்து சாப்பிட்டு முடித்தேன். இங்க வந்தா..

    ம்ம்ம்.. நாளைக்கும் காலிபிளவர் தான் போலிருக்கு. ட்ரை பண்ணிடறேன்.

    ReplyDelete
  4. வாங்க ராமலஷ்மி, நன்றி.

    அன்புடன்
    பவளா

    ReplyDelete
  5. அன்பின் ராஜராஜேஸ்வரி,

    தங்களுடைய மனம் திறந்த பாராட்டிற்கு மிக்க நன்றி...

    அன்புடன்
    பவளா

    ReplyDelete
  6. ஆகா, அப்பாதுரை சார் சமைக்கவெல்லாம் செய்வீங்களா.. சூப்பர். செய்து பாருங்க, தூளா இருக்கும்.

    அன்புடன்
    பவளா

    ReplyDelete