பவள
சங்கரி
மணலும், (வாலிகையும்) நுரையும் - கலீல் ஜிப்ரான்
பெருநீரைத் தேடாத நதியையும்
வசந்தமாய் மாறாத கூதாளிக்கால
மனநிறைவையும் நாம் மொழிவது
யாதென்று இயற்கையன்னையவள்
சிரத்தைகொளல் வேண்டுமோ.
கட்டு முகனையைப் பற்றி
நாம் கூறுமனைத்தையும் கவனம் கொள்ள
வேண்டுமோ,
நம்மில் எவரெவர் இவ்வளியை
சுவாசிக்கப் போகிறோம்?
நீவிர் ஆதவனுக்குப் பின்நோக்கிச் சென்றால்
உமது நிழலையேக் காண்பீர்
பகற்பொழுதின் கதிரொளியில்
சுதந்திரமாக இருக்கிறீர் நீவிர்,
மற்றும் இராப் பொழுதின்
நட்சத்திரங்களின் முன்னாலும் சுதந்திரமாகவே இருக்கிறீர் நீவிர்;
மேலும் சூரிய,சந்திரரும் நட்சத்திரமும்
இல்லாத போழ்தும் சுதந்திரமாகவே இருக்கிறீர் நீவிர்.
இவையனைத்தின் மீதும் உம் பார்வையைச்
செலுத்தாவிடினும்கூட சுதந்திரமாகவே இருக்கலாம் நீவிர்
ஆயின் நீவிர் விரும்புமவருக்கு,
அவரை விரும்புதலாலேயே
செடகனாகிறீர். (அடிமை)
மேலும் உம்மை விரும்புபவருக்கு,
அவர் உம்மை விரும்புவதாலேயே
அடிமையாகிறீர்.
ஆலய வாயிலில் இரப்போரே நாம் அனைவரும்,
அத்தயாபரன் ஆலயத்தில் நுழையும் போதும்,
வெளியேறும் போதும் நாம்
அவரவர்க்குரிய தயனியப் பங்கைப் பெறுகிறோம்.
ஆயினும் நாம் அனைவரும் அத்தயாபரனை
சிறுமைப்படுத்தும் வகையில் ஒருவர் பால் ஒருவர் நிம்பரி (பொறாமை) கொள்கிறோம்..
உம் பசிக்கேற்றதை மீறி ஏதும் உட்கொள்ள
இயலாது உம்மால். அந்த ரொட்டித் துண்டின் மற்றொரு பகுதி மற்றையவருக்குச் சொந்தமானது,
மற்றும் விருந்தினருக்காகவும்
மீதமிருக்க வேண்டும்.
உபசரிப்பில்லாத இல்லங்களனைத்தும் இடுகாடுகளாகிவிடும்.
இரக்க மனம் படைத்த ஓநாயொன்று சூதுவாதற்ற
ஆடு அதனிடம், “எம் இல்லத்திற்கு ஓர்முறையேனும் வந்து எமை கௌரவிப்பீரா?” என்றதாம்.
அதற்கு அந்த ஆடு, “இந்த அழைப்பு உம் வயிறு நிரம்புவதற்காக
இல்லையென்றால் யாம் உம் இல்லம் வருவதில் கௌரவிக்கப்படுவோம்” என்று பதலளித்ததாம்.
எம் விருந்தினரை வாயிலிலேயே நிறுத்தி, “உள்ளே வரும்போது உம் பாதத்தை துவட்டத்
தேவையில்லை. ஆனால் நீவிர் வெளியே செல்லும்போது துடைத்தால் போதும்” என்பேன் யான்.
பெருந்தகவு என்பது, உம்மைவிட எமக்கு அதிகத்தேவையுள்ள
ஒன்றை எமக்களிப்பதில் இல்லை, ஆனால் எவை உமக்கு எம்மைவிட அதிகத் தேவையுடையதாக இருக்கிறதோ அதை
எமக்கு வழங்குவதில்தான் இருக்கிறது அது.
உண்மையில் வழங்கும்போது நீவிர் வள்ளலாகிறீர்,
மேலும் நீவிர் வழங்கும்போது
உமது முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொண்டால், பெறுபவரின் சங்கடத்தைக் காணாமல் இருக்கக்
கூடும்.
செல்வந்தருக்கும், வறியோருக்கும் இடையேயான வேறுபாடென்பது
நாளொன்றின் உணவு வேட்கை மற்றும் ஓர் மணித்துளியின் நீர் வேட்கையும் மட்டுமே.
பெரும்பாலும் நாம் நம்முடைய முந்தைய
நாளையக் கடனைச் செலுத்துவதற்காகவே மறுநாட்களிடமிருந்து, கடன் பெறுகிறோம்.
யானும் தேவைதைகளாலும், தேவதாக்களாலும் பார்வையிடப்பட்டிருப்பினும்
அவைகளிலிருந்து விலகியே இருக்கிறேன்.
அது ஓர் தேவதையாக இருக்கும்போது பழமையான
தோத்திரப் பாடலுடன் பிரார்த்தனை செய்வேனாதலால் அவன் சலித்துப் போவான்;
அது ஓர் தேவதாவாக இருக்கும்போது யான்
ஒரு பழம்பாவத்தைச் செய்வேன், எம்மைக் கடந்து சென்றுவிடுவானவன்.
ஈதொன்றும் அத்துனை மோசமானதொரு சிறைச்சாலை
அல்ல; ஆயினும்
எம்முடைய சிறைக்கூடத்திற்கும், அண்மைச் சிறைக்கூடத்திற்கும் இடையேயுள்ள அம்மதிலைத்தான் யான்
விரும்புவதில்லை;
இருப்பினும் அந்தக் காப்பாளரையோ அன்றி
அச்சிறைக்கூடத்தின் கட்டமைப்பாளரையோ யான் பழி கூறமாட்டேனென உமக்கு உறுதியளிக்கிறேன்.
நீவிர் மீன் வேண்டியபோது உமக்கு அரவத்தைக்
கொடுப்பவரிடம், அந்த அரவத்தைத் தவிர மற்றேதும் இல்லாமல் இருக்கலாம். அப்போது அவருக்கதுவே பெருந்தன்மையாகிறது.
தந்திரங்கள் சிலகாலம் வெற்றியடையலாம்,
ஆயினும் அது எப்போதும்
தன்னைத்தானே மாய்த்துக் கொள்கிறது.
குருதியே சிந்தியிராத கொலையாளிகளை,
களவே செய்யாத களவாணிகளையும்
மற்றும் தவறிழைக்காத பொய்யுரையாளர்களையும் நீவிர் மன்னிப்பீராயின் நீவிரே சத்தியமான
பிழை பொறுப்பவராவீர்.
தீதிலிருந்து, நன்றைப் பிரித்தெடுக்கும்
அதன் மீதுத்தம் விரலைப் பதிக்கக்கூடியவரே, அந்த அதீச்சுவதனின் ஆடையின் விளிம்பைத் தீண்டக்கூடியவனாவான்.
உம்முடைய இதயமொரு எரிமலையாக இருந்தால்,
மலர்கள் உம் கரங்களில் மலரும் என்று நீவிர் எதிர்பார்ப்பது எங்ஙனம் சாத்தியம்?
தொடரும்
Sand And Foam - Khalil Gibran
Should nature
heed what we say of contentment no river would seek the sea, and no winter
would turn to Spring. Should she heed all we say of thrift, how many of us
would be breathing this air?
You see but
your shadow when you turn your back to the sun.
You are free
before the sun of the day, and free before the stars of the night;
And you are
free when there is no sun and no moon and no star.
You are even
free when you close your eyes upon all there is.
But you are a
slave to him whom you love because you love him,
And a slave to
him who loves you because he loves you.
We are all
beggars at the gate of the temple, and each one of us receives his share of the
bounty of the King when he enters the temple, and when he goes out.
But we are all
jealous of one another, which is another way of belittling the King.
You cannot
consume beyond your appetite. The other half of the loaf belongs to the other
person, and there should remain a little bread for the chance guest.
If it were not
for your guests all houses would be graves.
Said a
gracious wolf to a simple sheep, "Will you not honor our house with a
visit?"
And the sheep
answered, "We would have been honored to visit your house if it were not
in your stomach."
I stopped my
guest on the threshold and said, "Nay, wipe not your feet as you enter,
but as you go out."
Generosity is
not in giving me that which I need more than you do, but it is in giving me
that which you need more than I do.
You are indeed
charitable when you give, and while giving, turn your face away so that you may
not see the shyness of the receiver.
The difference
between the richest man and the poorest is but a day of hunger and an hour of
thirst.
We often
borrow from our tomorrows to pay our debts to our yesterdays.
I too am
visited by angels and devils, but I get rid of them.
When it is an
angel I pray an old prayer, and he is bored;
When it is a
devil I commit an old sin, and he passes me by.
After all this
is not a bad prison; but I do not like this wall between my cell and the next
prisoner's cell;
Yet I assure
you that I do not wish to reproach the warder not the Builder of the prison.
Those who give
you a serpent when you ask for a fish, may have nothing but serpents to give.
It is then generosity on their part.
Trickery
succeeds sometimes, but it always commits suicide.
You are truly
a forgiver when you forgive murderers who never spill blood, thieves who never
steal, and liars who utter no falsehood.
He who can put
his finger upon that which divides good from evil is he who can touch the very
hem of the garment of God.
If your heart
is a volcano how shall you expect flowers to bloom in your hands?
To Be Contd:
No comments:
Post a Comment