Monday, January 21, 2013

மணலும் (வாலிகையும்) நுரையும் - கலீல் ஜிப்ரான் - 8
பவள சங்கரி

 சுய - நுகர்வின்  விசித்திரமானதோர் வடிவம்! யான் தவறிழைத்திருக்கக்கூடிய மற்றும்  ஏமாற்றப்பட்ட காலமும் இருப்பினும் ,  யான் தவறிழைத்தும், வஞ்சிக்கப்பட்டும் இருக்கிறேன் என்பதை உணராமலே உள்ளேன் என்ற வீணான எண்ணம் கொண்டோரைக் கண்டு எள்ளி நகையாடலாம் யான்.

பின்பற்றுதலை விளையாட்டாகக் கொண்டு  பின்தொடருவோரைப் பற்றி யான் என்ன கூற இயலும்?

உம் ஆடைகளில் தம் அழுக்கடைந்த கரங்களைத் துடைப்பவரே உம்முடைய அந்த ஆடையை எடுத்துக் கொள்ளட்டும். அவ்ருக்கு அது மீண்டும் தேவையாக இருக்கலாம்; கட்டாயமாக உமக்கு அதன் தேவையிருக்காது.

பணப் பறிமாறறம் செய்வோர் நற்காப்போனாக இருக்க இயலாது என்பது துயரம்.


 உம்முடைய உள்ளார்ந்தக் குறைகளை நீவிர் பெற்ற நல்லொழுக்கங்களினால், தயைகூர்ந்து வெள்ளையடிக்காதீர்.. எம் பிழைகளை யானே கொள்வேன்; அவைகளனைத்தும் எம்மையேச் சாரும்.

 எம் எதிர்முகமதில் அந்நபர் சுகமாக உணருதல் வேண்டும் என்பதற்காக ஒருபோதும் யாம் இழைக்காதத் தவறுகளையும்கூட பெரும்பாலும் யான் ஏற்றுக் கொண்டிருக்கிறேனே.

வாழ்க்கையின் முகமூடிகளாய் இருப்பினும்கூட  ஆழ்ந்த மர்மங்களின்  முகமூடிகளவைகள்
உம்  அறிவிற்கேற்றவாரே உம்மால அடுத்தொருவரை மதிப்பிட இயலும்.
 நம்மில் எவர் குற்றவாளி மற்றும் எவர் குற்றமற்றவர் எனக்கூறுங்கள் இப்போது?

உம்முடைய தவறுகளுக்கு, பாதி அளவேனும் வருந்துகிறவன் எவனோ அவனே நியாயவான்.

மந்தனும், மேதாவியும் மட்டுமே மனிதன் உருவாக்கிய சட்டங்களை உடைப்பவர்கள்; மேலும் அவர்களே இறைவனின் இதயத்தின் அருகாமையில் இருப்பவர்.

 துரத்தப்படும் அந்தத் தருணம் மட்டுமே   விரைந்து செல்வீர் நீவிர்

எமக்குப் பகையாளிகளே இல்லை. ஓ, எம் இறையே, ஓர் பகை இருக்கவேண்டி வந்தால்
அவரும் எம்மோடு ஒத்த வல்லமையாளராக இருக்கட்டும்,
அந்தச் சத்தியம் மட்டுமே வெற்றிமையாகக்கூடும்.

நீவிர் இருவரும் இறக்கும் தருணமதில், உம் பகைவருடனும்  இணக்கமான நட்பு கொண்டிருப்பீர்..

தற்காப்பை வேண்டி ஒருவன்  தற்கொலை செய்து கொள்ளக்கூடும்.
முன்னொரு காலத்தில் அதீத அன்பிற்குரியவனாகவும், அதீத அன்புடையவனாகவும் இருந்ததால் சிலுவையில் அறையப்பட்டவனொருவன் வாழ்ந்து வந்தான்.

அது போன்றொருவரை நேற்றைய தினம் ஆச்சரியமான வகையில் மும்முறை சந்தித்தேன்.

முதல் முறையாக, ஓர் விபச்சாரியைச் சிறைக்கூடத்திலிட வேண்டாம் என காவலரிடம் மன்றாடும் ஒருவன்;
இரண்டாம் முறையாக நாடு கடத்தப்பட்ட ஒருவனுடன் திராட்சை இரசம் பருகிக் கொண்டிருந்தான்; மேலும் மூன்றாம் முறையாக தேவாலயத்தினுள், உயர் நிலைக்கு உயர்த்துவோரிடம் கைகலப்பில் ஈடுபட்டிருந்தான்.

நன்றும், தீதும் குறித்து அவர்கள் விளம்புவதனைத்தும் சத்தியமாகவே இருந்தால், பின் எம் வாழ்க்கை ஒரு நீண்ட குற்றமாக இருக்கும்.

இரக்கம் என்பதே அரை நியதி,

எவருடைய சகோதரருக்கு யான் அநியாயம் இழைத்தேனோ, அந்த ஒருவரே எமக்கு அநியாயம்  இழைத்தவர்.

சிறைக்கூடத்தில் அடையப்போகும் ஒருவரைக் காண நேர்ந்தால் உம் இருதயத்தினுள், “ஒருவேளை அவர் குறுகிய சிறையிலிருந்து தப்பிக்கலாம் “ என்று கூறிக்கொள்வேன்.
மேலும் ஓர் குடிகாரனைக் காண நேர்ந்தால் “இதைக்காட்டிலும் அவலட்சணமான ஏதோ ஒன்றிலிருந்து விடுபட விழைகிறார் “ என்று .உம் இதயத்திடம் கூறிக்கொள்ளும்.

பெரும்பாலும் தற்காப்பை வெறுப்பவன் யான்; ஆயினும் யான் சக்திமானாக இருந்திருந்தால் அது போன்றொரு ஆயுதத்தைப் பயன்படுத்தியிருக்க மாட்டேன்.

கண்களில் வெறுப்பைச் சூடிக்கொண்டு இதழ்களில் புன்சிரிப்பையும் வைத்திருப்பவன் எத்தகைய மந்தனவன்..

எமக்குப் பின்னால் இருப்போர் மட்டுமே எம்மை அவ்வியம் கொள்ளவோ அன்றி வெறுக்கவோ இயலும்.
யான் என்றுமே அவ்வியம் கொள்ளவோ அன்றி வெறுப்படைந்தோ இருந்ததில்லை; யான் எவரைவிடவும்  உயர்ந்தவன் இல்லை.
எம்மைக்காட்டிலும் உயர்ந்தவரே எம்மைப் பாராட்டவோ அன்றி சிறுமைப்படுத்தவோ இயலும்.
யாம் என்றுமே பாராட்டப்படவோ அன்றி சிறுமைப்படுத்தப்ப்படவோ இல்லை; யான் எவருக்கும் தாழ்ந்தவனில்லை.

நீவிர் எம்மிடம் கூறும், “எம்மால் உம்மைப் புரிந்துகொள்ள இயலவில்லை”, என்பது எம் தகுதிக்கு மீறியப் பாராட்டு, மேலும் அது உமக்கொரு தகுதியற்ற அவமதிப்பு.

வாழ்க்கை எமக்குப் பொன்னை வழங்கும்போது, உமக்கு வெள்ளியை வழங்கிவிட்டு அதற்கும் பெருந்தன்மை என பெருமிதம் கொள்ளும் யான் எத்தகைய அற்பமானவன்.
வாழ்க்கையின் இருதயத்தை அடையும் தருணமதில், உம்மையே நீவிர் குற்றவாளியைக் காட்டிலும் உயர்ந்தோராய், மற்றும் தீர்க்கதரிசியைக் காட்டிலும் தாழ்ந்தவராய் உணரக்கூடும்.
நீவிர் இரக்கம் கொள்ள வேண்டியது மெல்லடிக் கொண்டோரையன்றி மென் சிந்தையுடையோரை அல்ல என்பதே விநோதம்,
மேலும் குருட்டு இதயத்தைக் காட்டிலும், குருட்டுப் பார்வையே பரிதாபத்திற்குரியது.

அந்த முடவனுக்கு தமது ஊன்றுகோலை தம் பகையாளியின் சிரசின் மீது உடைக்காமலிருப்பதே அறிவார்ந்த செயல்.

உமது இருதயத்திலிருந்து எடுத்துக் கொள்ளக்கூடிய ஒருவருக்கு, தம் சட்டைப் பையிலிருந்து அளிக்குமவர் எத்தகைய குருடர். .

தொடரும்

Sand And Foam - Khalil Gibran (8)

A strange form of self-indulgence! There are times when I would be wronged and cheated, that I may laugh at the expense of those who think I do not know I am being wronged and cheated.

What shall I say of him who is the pursuer playing the part of the pursued?

Let him who wipes his soiled hands with your garment take your garment. He may need it again; surely you would not.

It is a pity that money-changers cannot be good gardeners.

Please do not whitewash your inherent faults with your acquired virtues. I would have the faults; they are like mine own.

How often have I attributed to myself crimes I have never committed, so that the other person may feel comfortable in my presence.

Even the masks of life are masks of deeper mystery.

You may judge others only according to your knowledge of yourself.
Tell me now, who among us is guilty and who is unguilty?

The truly just is he who feels half guilty of your misdeeds.

Only an idiot and a genius break man-made laws; and they are the nearest to the heart of God.

It is only when you are pursued that you become swift.

I have no enemies, O God, but if I am to have an enemy
Let his strength be equal to mine,
That truth alone may be the victor.

You will be quite friendly with your enemy when you both die.

Perhaps a man may commit suicide in self-defense.

Long ago there lived a Man who was crucified for being too loving and too lovable.
And strange to relate I met him thrice yesterday.
The first time He was asking a policeman not to take a prostitute to prison; the second time He was drinking wine with an outcast; and the third time He was having a fist-fight with a promoter inside a church.

If all they say of good and evil were true, then my life is but one long crime.

Pity is but half justice.

THE ONLY ONE who has been unjust to me is the one to whose brother I have been unjust.

When you see a man led to prison say in your heart, "Mayhap he is escaping from a narrower prison."
And when you see a man drunken say in your heart, "Mayhap he sought escape from something still more unbeautiful."

Oftentimes I have hated in self-defense; but if I were stronger I would not have used such a weapon.

How stupid is he who would patch the hatred in his eyes with the smile of his lips.

Only those beneath me can envy or hate me.
I have never been envied nor hated; I am above no one.
Only those above me can praise or belittle me.
I have never been praised nor belittled; I am below no one.

Your saying to me, "I do not understand you," is praise beyond my worth, and an insult you do not deserve. How mean am I when life gives me gold and I give you silver, and yet I deem myself generous.

When you reach the heart of life you will find yourself not higher than the felon, and not lower than the prophet.

Strange that you should pity the slow-footed and not the slow-minded,
And the blind-eyed rather than the blind-hearted.

It is wiser for the lame not to break his crutches upon the head of his enemy.

How blind is he who gives you out of his pocket that he may take out of your heart.

To Be Contd:

நன்றி : திண்ணை

2 comments: