Tuesday, January 29, 2013

மணலும் (வாலிகையும்) நுரையும் - (9)


sand and foam - 9 - Khalil Gibran

பவள சங்கரி


வாழ்க்கை ஓர் ஊர்க்கோலம்.
பாதத்தின் அந்த மெத்தனம் அதை வெகு துரிதமாகக் கண்டுணர்ந்ததால் அவன் வெளியேறுகிறான்.
மேலும் பாதத்தின் அந்த துரிதம் அதை மிகத் தாமதமாகக் கண்டுணர்ந்ததால் அவனும்கூட வெளியேறுகிறான்.

பாபகம் என்ற அந்த ஒன்று உள்ளதெனில் நம்மில் சிலர்  நம் முன்னோர்களின் பாதச்சுவடுகளைப் பின்பற்றி அதைச் செய்கிறோம்;
மேலும் நம்மில் சிலர் நம் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக, ஆளுமையுடன்  அதைச் செய்கிறோம்.

உண்மையில் நல்லவன் என்பவன் தீயவர்களாகக் கருதப்படும் அனைவருடனும் இருக்கும் அந்த ஒருவனே.


நாம் அனைவரும் சிறைக் கைதிகளேயாயினும் நம்மில் சிலர் சாளரத்தினுடனான சிறையிலும், மற்றும் சிலர் அது இல்லாத சிறையிலும் உள்ளோம்.

நாம் நம் நன்மைகளுக்குச் செய்வதைக்காட்டிலும் நம் தவறுகளை அதிக சுறுசுறுப்புடன் காப்பது விநோதம்.
நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் நம் பாவங்களுக்கு ஒப்புதல் வாக்குமூலம் கொள்ள நேர்ந்தால்,  நம்மிடம் அசல்தன்மை இன்மையால் ஒருவரைப் பார்த்து ஒருவர் எள்ளி நகையாட வேண்டிவரும்.
நாம் நம் நற்பண்புகளை வெளிப்படுத்த நேர்ந்தால் அதே காரணத்திற்காகவும் நகைப்போம்.

மனிதனால் உருவாக்கப்பட்ட மரபுகளுக்கு எதிராகக் குற்றமிழைக்கும்வரை ஒருவர், மனிதரால் உருவான சட்டங்களைவிட உயர்ந்து இருக்கிறான்.
அதன் பிறகு அவன் எவரையும்விட உயர்ந்தோ அன்றி தாழ்ந்தோ இருக்கமாட்டான்.

அரசாங்கம் என்பது உமக்கும் எமக்கும் இடையிலானதோர்  ஒப்பந்தம். நீவிரும், யானும் பெரும்பாலும் தவறிழைப்பவராகவே உள்ளோம்.

குற்றம் என்பது தேவையின் மற்றொரு பெயராகவோ அன்றி ஓர் பிணியினோர் அம்சமாகவோ இருக்கலாம்..

அடுத்தொருவரின் பிழைகளை நினைவில் கொள்ளுதலைக் காட்டிலும் மிகுந்ததோர் தவறும் உளதோ?

உம்மைக் கண்டு நகைக்கும் ஒருவரிடம் இரக்கம் கொள்ளலாம் நீவிர்; ஆயின் அவரைக் கண்டு நீவிர் நகைத்தால் பின் ஒருக்காலும் உம்மை நீவிரே மன்னிக்கமாட்டீர்.
உம்மை ஒருவர் நோகடித்தால், நீவிர் அக்காயங்களை மறக்கலாம்; ஆனால் அவரை நீவிர் நோகடித்தால் எப்பொழுதும் உம் நினைவில் தங்கிவிடும் அது. .

உண்மையில் உம்முடைய உன்னத சுயம் வழங்கப்பட்ட மற்றொரு உடலே அந்த அடுத்தொருவன் என்பது.

உம்மால் ஓர் இறகைக்கூட அளிக்க முடியாத போழ்து உம் இறக்கைகளுடன் பறக்கும் அம்மமனிதர்களைக் கொண்டிருக்கும் நீவிர் எவ்வளவு அக்கறையற்றவர்,

ஒருமுறை ஓர் மனிதன் எம் பலகையில் அமர்ந்து, எம் ரொட்டியை உண்டு எம் பழரசத்தைப் பருகி எம்மைப் பார்த்து நகைத்துக் கொண்டே வெளியேறினான்.
பிறகு ரொட்டிக்கும், மதுவிற்குமாக மீண்டுமவன் வந்தபோது வெறுத்தொதுக்கினேன்.
மேலும் அந்தத் தேவதைகள் எம்மைப் பார்த்துச் சிரித்தன.

வெறுப்பென்பது ஓர் சவம். உம்மில் எவர் கல்லறையாகப் போகிறீர்?

கொலை செய்யப்பட்ட ஒருவருக்கு, தான் ஒரு கொலையாளி அல்ல என்பதே கௌரவம்.

மனித இனத்தின் நீதிபதி என்பது அதன் அமைதியான இருதயத்தினுள் உள்ளதேயன்றி அதன் வாயாடி மனதில் அல்ல.

எம் பொழுதுகளை யாம் பொன்னிற்காக விற்க மாட்டேன் என்பதாலேயே எம்மைப் பித்தனாகக் கருதுகிறார்கள்; மேலும் யானும் அவர்களைப் பித்தர்களாக எண்ணுகிறேன், காரணம் எம் பொழுதுகளுக்குமோர் விலையிருப்பதாக அவர்கள் எண்ணுவதால்.

அவர்கள் தங்கள் செல்வங்களான சுவர்ணம், வெள்ளி, தந்தம், கருங்காலி மரம் போன்றவற்றை நம்முன் பரப்பும் போது நாம் அவர்முன் நம் இதயங்களையும் மற்றும் நம் ஆன்மாக்களையும் பரப்புகிறோம்;
இருப்பினும் அவர்கள் தம்மைத்தாமே புரவலனாகவும்  மற்றும் நம்மை அதிதியாகவுமே  கருதுகிறார்கள்.

கனவுகளோடும் மற்றும் அதனை நிறைவேற்றத் துடிக்கும் இச்சையுடனும் இருப்போரின் மத்தியில் யான் கடையனாகவே இருப்பேன் என்பதைவிட கனவுகளும், ஆசைகளும் இன்றி மிக உயர்ந்த நிலையில் இருக்கிறேன் .

எவன் ஒருவன் தம் கனவுகளை வெள்ளியாகவும், தங்கமாகவும் மாற்றுகிறானோ அவனே மனிதர்களிலேயே மிகவும் பரிதாபத்திற்குரியவன். நாம் அனைவரும் நம் இதயத்தின் இச்சையின் உச்ச நிலையை நோக்கி உயர்ந்து கொண்டிருக்கிறோம். உயர்ந்துகொண்டிருக்கும் மற்றொருவர் உம்முடைய கொள்ளையடிக்கப்பட்ட பணப்பையையும் களவாடி அதன் மீது மெழுகுக் கொழுப்பையும் பூசி அதை மற்றொன்றின்மீது கனரகமாக்குபவரிடம் நீவிர் இரக்கம் கொள்வீராக.;


Sand And Foam - (9) Khalil Gibran

Life is a procession. The slow of foot finds it too swift and he steps out;
And the swift of foot finds it too slow and he too steps out.

If there is such a thing as sin some of us commit it backward following our forefathers' footsteps;
And some of us commit it forward by overruling our children.

The truly good is he who is one with all those who are deemed bad.

We are all prisoners but some of us are in cells with windows and some without.

Strange that we all defend our wrongs with more vigor than we do our rights.

Should we all confess our sins to one another we would all laugh at one another for our lack of originality.
Should we all reveal our virtues we would also laugh for the same cause.

An individual is above man-made laws until he commits a crime against man-made conventions; After that he is neither above anyone nor lower than anyone.

Government is an agreement between you and myself. You and myself are often wrong.

Crime is either another name of need or an aspect of a disease.

Is there a greater fault than being conscious of the other person's faults?

If the other person laughs at you, you can pity him; but if you laugh at him you may never forgive yourself.
If the other person injures you, you may forget the injury; but if you injure him you will always remember.
In truth the other person is your most sensitive self given another body.

How heedless you are when you would have men fly with your wings and you cannot even give them a feather.

Once a man sat at my board and ate my bread and drank my wine and went away laughing at me.
Then he came again for bread and wine, and I spurned him;
And the angels laughed at me.

Hate is a dead thing. Who of you would be a tomb?

It is the honor of the murdered that he is not the murderer.

The tribune of humanity is in its silent heart, never its talkative mind.

They deem me mad because I will not sell my days for gold;
And I deem them mad because they think my days have a price.

They spread before us their riches of gold and silver, of ivory and ebony, and we spread before them our hearts and our spirits.;
And yet they deem themselves the hosts and us the guests.

I would not be the least among men with dreams and the desire to fulfill them, rather than the greatest with no dreams and no desires.

The most pitiful among men is he who turns his dreams into silver and gold.

We are all climbing toward the summit of our hearts' desire. Should the other climber steal your sack and your purse and wax fat on the one and heavy on the other, you should pity him;

To Be Contd....

நன்றி : திண்ணை

No comments:

Post a Comment