பவள சங்கரி
இரமியத்திற்கப்பால் எந்த மெய்ஞானமோ அன்றி விஞ்ஞானமோ இல்லை.
யானறிந்த ஒவ்வொரு உயர்ந்த மனிதனும் ஏதோ சிறிய அளவிலேனும் ஒப்பனை செய்திருந்தனர்; மேலும் அந்தச் சொற்பமே அவனை மந்தமாக இருப்பதிலிருந்தோ அல்லது பித்துக்குளித்தனத்திலிருந்தோ அன்றி தற்கொலையிலிருந்தோ காக்கிறது.
எவரையும் அதிகாரம் செலுத்தாமலும், எவரிடமும் அடிபணியாமலும் இருப்பவர் எவரோ அவரே உண்மையில் பெரிய மனிதர்.
அவன் குற்றவாளிகளையும் தீர்க்கதரிசிகளையும் அழிப்பதாலேயே அவனையோர் சராசரியானவன் என்று எளிதாக நம்பிவிடமாட்டேன்.
இறுமாப்பெனும் பிணியுடனான காதற்பிணியே பொறுமையென்பது.
புழுக்கள் திரும்பலாம்; ஆனால் இரசிகங்களும் (யானைகள்) கூட விட்டுக்கொடுக்குமென்பது விநோதம் இல்லையா?
ஓர் வேற்றுமை என்பது இரு மனங்களுக்கிடையேயான குறுககுப் பாதையாகலாம்.
யானே தீச்சுவாலையாகவும் மற்றும் யானே அந்த உலர் தூரிகையாகவும் உள்ளதால் எம்மின் ஓர் பகுதி எம்மின் அந்த மற்றொரு பகுதியை உட்கொள்கிறது.
நாம் அனைவரும் புனிதமானதொரு மலையின் உச்சியைத்தான் தேடிக்கொண்டிருக்கிறோம்; ஆயினும் நாம் நம் கடந்த காலத்தை ஓர் வழிகாட்டியாக அல்லாமல் ஓர் மாதிரிப்படமாகக் கருதினால் நம் சாலை குறுகிவிடாதா?.
கதறி அழுவதில் பெருமிதம் கொள்வதும், நகைப்பதற்கு அதிக முக்கியத்துவமும் மற்றும் அதீத தன்னலத்துடன், இருப்பதை விட்டு மற்றொன்றை நாடும் போழ்தும் பெற்றிருக்கும் ஞானத்தையும், அந்த ஞானமே முடிவிற்குக் கொண்டுவந்துவிடுகிறது
நீவிர் அறிந்த அனைத்தைக்கொண்டும் எம்மை நிறைத்துக் கொண்ட யான், நீவிர் அறிந்திராத அனைததிற்குமாக எந்த இடத்தைக் கொள்ள இயலும்?
வாயாடிகளிடமிருந்து அமைதியையும், பொறுமையற்றவரிடமிருந்து பொறுமையையும் மற்றும் கருணையற்றவரிடமிருந்து கருணையையும் யான் கற்றுக்கொண்டேன்; இருப்பினும் யான் அந்த ஆசிரியர்களிடம் நன்றி கெட்டவனாகவே இருப்பது விநோதம்.
வைராக்கியமுடையவன் என்பவன் முழுச் செவிடான நாவன்மையுள்ளவன்.
அவ்வியம் கொள்பவனின் அமைதி என்பது மிகுந்த இரைச்சலுடையது.
நீவிர் அறிய வேண்டியதனை அடையும் தருணம், நீவிர் உணர வேண்டியதன் ஆரம்பத்தில் இருப்பீர்.
ஓர் மிகைப்படுத்தல் என்பது தம் நிதானத்தை இழந்ததோர் சத்தியம்.
ஒளி வெளிப்படுத்துகிற அந்த ஒன்றை மட்டும் நீவிர் காணக்கூடுமாயின் மற்றும் ஒலி அறிவிக்கின்ற அந்த ஒன்றை மட்டும் கேட்பீராயின், பின் உண்மையிலேயே நீவிர் எதையும் காணவோ அன்றி கேட்கவோ மாட்டீர்.
உண்மை என்பது பால் பண்புகள் நீக்கப்பட்ட உளமை..
நீவிர் ஒரே நேரத்தில் நகைத்துக் கொண்டும், கருணையற்றும் இருக்க இயலாது.
ஓர் இராச்சியம் இல்லாததோர் அரசன் மற்றும் இரத்தல் அறியாததோர் வறியோன் ஆகியோரே எம் இருதயத்திற்கு நெருக்கமானவர்கள்
ஓர் நவீனமற்ற வெற்றியைக்காட்டிலும் கூச்சமுள்ள தோல்வி உயர்ந்தது.
ஓர் உழவனின் நம்பிக்கையோடு மட்டுமே நீவிர்.புவனியில் எங்கு தோண்டினாலும் ஓர் புதையலை அடைய முடியும்,
இருபது குதிரைக்காரர்கள் மற்றும் இருபது வேட்டை நாய்களுடன் துரத்தப்பட்ட வேட்டை நரி, “ஆம் அவைகள் எம்மைக் கொன்றுவிடும். ஆனால் எத்துனை பரிதாபமான மற்றும் மந்தமான புத்தியுடையவைகளாக இருக்கவேண்டும் அவைகள். இருபது கழுதைகளின்மீது சவாரி செய்யும் இருபது நரிகளும், அத்தோடு இருபது ஓநாய்களும் சேர்ந்து ஒரு மானிடனைத் துரத்திப் பிடித்துக் கொல்லுவது நிச்சயம் சிறந்ததொரு செயலாகாது” என்றது.
நம்மால் ஏற்படுத்தப்பட்ட சட்டங்களால் பயன்பெறுவது நம் மனமேயன்றி ஒருக்காலும் நம்முள் இருக்கும் ஆன்மா அல்ல.
ஓர் பயணியாக மற்றுமோர் வழிகாட்டியாக அன்றாடம் எம் ஆன்மாவினுள் ஒரு புதியப் பகுதியை கண்டறிகிறேன் யான்.
ஓர் மங்கையவள் அதனை எதிர்த்து, “ஆமாம், அஃது ஓர் உரிமைப் போர்தான். எம் புத்திரன் அதில் வீழ்ந்துவிட்டான்” என்றாள்.
யான் வாழ்ச்சியிடம், “இறவின் உரையைக் கேட்பேன் யான்” என்றேன்.
மேலும் வாழ்வு தம் குரலை சற்றே உயர்த்தி, “நீவிர் தற்போது அவன் குரலைக் கேட்கிறீர் ” என்றது.
நீவிர் உம் வாழ்ச்சியின் அனைத்து மர்ம முடிச்சுகளையும் அவிழ்த்துவிட்டீரானால் இறப்பிற்காக ஏங்குவீர், காரணம் அது வாழ்வின் மற்றுமொரு மர்மம்.
பிறப்பும், இறப்பும் துணிச்சலின் இரு உன்னத வெளிப்பாடுகள்.
எம் நண்பனே, நீரும் யானும் வாழ்க்கை முழுவதும் யாதிகனாகவே (வழிப்போக்கன்) இருந்துவிடலாம்.
மேலும் ஒருவருக்கொருவர், மற்றும் ஒருவர் தனக்காக,
நீர் பேசுவதை யான் கவனம் கொள்ளும் அந்த நாள் வரை,
உம் குரலை எம் சொந்தக் குரலாகக் கருதும்வரை;
மேலும் உம்முன் நிற்கும் அப்பொழுதில் யானொரு கண்ணாடியின் முன் நிற்பது போன்ற எண்ணமே வேண்டும்.
அவர்கள் எம்மிடம், “நீவிர் உம்மை அறிந்தால் அனைத்து மானிடரையும் அறிவீர்” என்றனர்.
மேலும் யான், “அனைத்து மானிடரின் தேடலில்தான் யாம் எம்மையே அறிய முடியும்” என்றேன்.
நிதத்துரு என்பவன் இரு மானுடர்கள்; ஒருவன் இருளிலும் விழித்துக் கொண்டிருப்பவன், மற்றையவன் ஒளியிலும் நித்திரை கொள்பவன்.
தொடரும்
There is neither religion nor science beyond beauty.
Every great man I have known had something small in his make-up; and it was that small something which prevented inactivity or madness or suicide.
The truly great man is he who would master no one, and who would be mastered by none.
I would not believe that a man is mediocre simply because he kills the criminals and the prophets.
Tolerance is love sick with the sickness of haughtiness.
Worms will turn; but is it not strange that even elephants will yield?
A disagreement may be the shortest cut between two minds.
I am the flame and I am the dry bush, and one part of me consumes the other part.
We are all seeking the summit of the holy moutain; but shall not our road be shorter if we consider the past a chart and not a guide?
Wisdom ceases to be wisdom when it becomes too proud to weep, too grave to laugh, and too self-ful to seek other than itself.
Had I filled myself with all that you know what room should I have for all that you do not know?
I have learned silence from the talkative, toleration from the intolerant, and kindness from the unkind; yet strange, I am ungrateful to these teachers.
A bigot is a stone-leaf orator.
The silence of the envious is too noisy.
When you reach the end of what you should know, you will be at the beginning of what you should sense.
An exaggeration is a truth that has lost its temper.
If you can see only what light reveals and hear only what sound announces,
Then in truth you do not see nor do you hear.
A fact is a truth unsexed.
You cannot laugh and be unkind at the same time.
The nearest to my heart are a king without a kingdom and a poor man who does not know how to beg.
A shy failure is nobler than an immodest success.
Dig anywhere in the earth and you will find a treasure, only you must dig with the faith of a peasant.
Said a hunted fox followed by twenty horsemen and a pack of twenty hounds, "Of course they will kill me. But how poor and how stupid they must be. Surely it would not be worth while for twenty foxes riding on twenty asses and accompanied by twenty wolves to chase and kill one man."
It is the mind in us that yields to the laws made by us, but never the spirit in us.
A traveler am I and a navigator, and every day I discover a new region within my soul.
A woman protested saying, "Of course it was a righteous war. My son fell in it."
I said to Life, "I would hear Death speak."
And Life raised her voice a little higher and said, "You hear him now."
When you have solved all the mysteries of life you long for death, for it is but another mystery of life.
Birth and death are the two noblest expressions of bravery.
My friend, you and I shall remain strangers unto life,
And unto one another, and each unto himself,
Until the day when you shall speak and I shall listen
Deeming your voice my own voice;
And when I shall stand before you
Thinking myself standing before a mirror.
They say to me, "Should you know yourself you would know all men."
And I say, "Only when I seek all men shall I know myself."
MAN IS TWO men; one is awake in darkness, the other is asleep in light.
To Be Contd.......
நன்றி : திண்ணை
No comments:
Post a Comment