Tuesday, August 27, 2013

கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே!


பவள சங்கரி




தேவையற்ற கசதியில் உழன்று திரிவது
தேர்ந்த ஞானம் கொண்டோரின் செயலல்ல

முக்காலத்தும் இல்லாததொன்றின் இருப்பு 
எக்காலத்தும் இல்லை என்பதே சத்தியம்

புலன்களுக்கு அகப்படாத ஒன்று இல்லாததொன்றாகுமா?
நித்தியமான, நிரந்தரமானதொன்று ஆன்மா மட்டும்தானே!

அழிவதெல்லாம் இரத்தமும் சதையும் உள்ள உடல்தானே
 அழியாத நித்தியமாய் வாழும் ஞாதிருவை அழிக்க எவருளர்?

சுயதருமமும் உன் சுபாவமும் உரைப்பதில் குறைவிருந்தாலும்
கடமையில் தவறாமல் இருப்பதே தர்மம் இல்லையா?

பிறிதொருவருடைய கடமையை ஏற்று செம்மையாய்ச் செயலாற்றினாலும்
தம் கடமையில் தவறாது அதனைக் கண்ணெனப் போற்றுதல் வேண்டுமே

அக்கினி கக்கும் புகை போல எச்செய்கையிலும் ஏதேனுமொரு
குறையும், பகையும் இருக்கத்தானே செய்கிறது!

சுபாவத்தினால் விதிக்கப்பட்ட கடமையைச் சலியாமல்
சுவையாகக் கடைபிடிப்பவனே  பாவமறியாதவன்!

படத்திற்கு நன்றி:

http://www.google.co.in/imgres?imgurl=http://www.alaikal.com/news/wp-content/uploads/kuruna-geta.jpg&imgrefurl=http://www.alaikal.com/news/?p%3D59120&h=338&w=450&sz=99&tbnid=SCnPRmaj7hEO3M:&tbnh=90&tbnw=120&zoom=1&usg=__XOA-ztMbBMvfwSV75Xo1-aSI4iM=&docid=ZlUegG_G5yfxNM&sa=X&ei=GXUcUoqAPIX_rAenxoH4AQ&ved=0CEAQ9QEwAw&dur=129#imgdii=SCnPRmaj7hEO3M%3A%3BW5FPsmBJ6FOdOM%3BSCnPRmaj7hEO3M%3A

7 comments:

  1. Replies
    1. மிக்க நன்றிங்க திரு. தனபாலன்.

      அன்புடன்
      பவளா

      Delete
  2. புலன்களுக்கு அகப்படாத ஒன்று இல்லாததொன்றாகுமா?
    நித்தியமான, நிரந்தரமானதொன்று ஆன்மா மட்டும்தானே!//

    ஆம், உண்மை.
    புதிய கீதை நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க கோமதி மேடம்.

      அன்புடன்
      பவளா

      Delete
    2. மிக்க நன்றிங்க கோமதி மேடம்.

      அன்புடன்
      பவளா

      Delete
    3. அன்பின் திரு பாண்டியன்,

      தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி.

      அன்புடன்
      பவளா

      Delete
  3. செயலில் இருமைகள் என்று சொல்லக் கூடிய நல்லதுன் கெட்டதும் இருக்கத் தானே செய்யும். நல்லதை இன்முகத்துடன் ஏற்பவரே சிறந்த பண்பாளராக இருக்க முடியும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...