பவள சங்கரி
மழலை உலகினுள் கபடமற்ற
மலராய் நுழைந்து மாசற்ற
அன்பைப் பனியாய் பொழிந்து
நேசமெனும் தணலில் காய்ந்து
கதகதப்பாய் கவலையின்றி
கற்கண்டாய் மொழிகள் பலப்பேசி
செவ்விதழ் மலர செழுங்கரும்பாய்
வெள்ளைப்பூக்களின் தேனிசை முழங்க
கவின்மிகு கற்பனைத்தேரில்
கலந்தே கவிபாடி கசிந்து மனமுறுகி
செங்கதிரோனின் பாசக்கரங்கள்
பற்றற்று பற்றிக்கொள்ள பாந்தமாய்
பசுமையாய் பரவசமாய் மலர்ந்தது
எம்காலைப்பொழுது!
படத்திற்கு நன்றி:
பரவசமாய் மலர்ந்தது
ReplyDeleteஎம்காலைப்பொழுது!
அழகான விடியல்..!
அன்பின் திருமிகு இராஜராஜேஸ்வரி,
Deleteநன்றிங்க.
அன்புடன்
பவளா
பசுமையாய் பரவசமாய் மலர்ந்த காலைப்பொழுதினை அழகாக விவரித்துள்ள்து படிக்கவே மகிழ்ச்சியாக உள்ளது. பாராட்டுக்கள். நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்..
ReplyDeleteஅன்பின் திரு வை.கோ.
Deleteமிக்க நன்றி சகோதரரே.
அன்புடன்
பவளா