Wednesday, December 4, 2013

காளான் பூத்த கல்மரம்




பவள சங்கரி

என்ன பெயர் இதற்கு?
எத்தனை யுகங்கள் தொடர்கிறது இது?
எவ்வளவு யுகங்களாகக் கூடிக்கொண்டிருக்கிறது?
அன்பு ஆயுளைக்கூட்டும் அருமருந்தாமே?
முந்து கேம்பிரிய ஊழியில்  மெல்ல உயிர்த்ததுவோ?
உயிரற்ற உறழாய்த் தோன்றிப்பின் உயிர்க்கலனாய்
உருவெடுத்துப் பல்கிப்பெருகிய காலந்தொட்டு
 கேம்பிரியக்காலத்திலும் தொடர்ந்ததுவோ?


மரபுத்தகவல்கள் சுமந்தபடி 
மரபன்களும் அடக்கமதில்!
பொருண்மச் சுழற்சித் தகவலின் பரிமாற்றம்
பொல்லாத உயிர்த்துடிப்பின் உருமாற்றம்
காளான் பூத்த கல்மரமாய் காத்திருப்பில்
மாளாத  மகங்காரம் மலையேறியதில்
வற்றாத ஜீவநதிப் பிரவாகமாய் மனம்
பொற்றாமரைக் குளமதில் அணையாத ஜீவஒளி! 

4 comments:

  1. கேள்விகள் சிந்திக்க வைத்தன...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க திரு தனபாலன்

      Delete
  2. //வற்றாத ஜீவநதிப் பிரவாகமாய் மனம்
    பொற்றாமரைக் குளமதில் அணையாத ஜீவஒளி! //

    அருமையான வரிகள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க திரு வை.கோ. அவர்களே.

      Delete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...