மிக்க நன்றி திரு கல்பட்டு நடராஜன் ஐயா.
நேத்து ராத்திரி என் கனவுல ஒரு பாம்பு வந்து என்னைக் கேட்டிச்சு, “ஐயா கல்பட்டாரே எங்களெப் பத்தி கட்டுரை எளுதி எங்கெளெ ஒரே அடியா வெஷம் உள்ளவங்க, வெஷமம் செய்யறவங்கன்னு டீவீ சீரியலுங்களுலெ வர வில்லீங்க மாதிரி ஜனங்களுக்குக் காட்டீட்டீங்களே. எங்களுக்கும் மனுசங்களுக்கும் ஆண்டாண்டு காலமா இருந்து வந்திருக்கிற தொடர்பு பத்தி ஒரு வார்த்தெ எளுதினீங்களா? இது என்னங்க ஓர வஞ்செனெ?” ன்னு. அதன் விளைவுதான் இந்த அஞ்சாவது கட்டுரை.
மனிதன் இந்த உலகில் தோன்றிய நாள் முதல் இன்று வரை பாம்பும் மனிதனும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை.
ஆதி மனிதன் ஆதாமும் ஏவாளும் ஒற்றுமை இன்றி வாழ்ந்தனர். ஆதாம் ஒரு சோம்பேரி. உண்பதும் உறங்குவதுமே அவன் தொழில். ஏவாளின் வேலையோ அவனுக்கு உணவு தயார் செய்வது, நிலத்தைக் கொத்தி சீராக்கி பயிர் செய்வது இத்தியாதி.
அவர்களைப் படைத்த கடவுள் அவர்களை அறிவு புகட்டும் ஒரு மரத்தின் பழத்தினைத் தின்னக் கூடாது ஏனெனில் அது கெட்டது என்று சொல்லி இருந்தார்.
ஒரு நாள் ஏவாள் வேலை செய்து களைத்துத் தன் நிலையைப் பற்றி நொந்து கொண்டிருந்த போது அங்கு தோன்றிய பாம்பு அவளுடன் இதமாகப் பேசி இறைவன் தடை விதித்திருந்த அறிவு மரத்தின் பழத்தைத் தின்னத் தூண்டியது. ஏவாள் தின்பதற்கு முன் அவள் கண்ணில் படாமல் அந்தப் பழத்தினைக் கொத்தி அதில் தன் விஷத்தை ஓரளவு ஏற்றி விட்டது. பழத்தைத் தின்ற ஏவாள் தான் தின்றதோடு நிறுத்தாமல் ஆதாமின் உணவிலும் அதைக் கலந்தளித்து விட்டாள். கோபமடைந்த கடவுள் தன் கட்டுப் பாட்டை மீறிய ஆதாம் எவாளை ஈடன் நந்த வனத்தில் இருந்து விரட்டி விட்டார்.
ஈடனை விட்டு வெளியேறும் போது ஏவாள் உனக்கு ஒரு பரிசு வைத்திருக்கிறேன் எனச் சொல்லி ஆதாமின் கன்னத்தில் முத்தமிட்டாள். ஆதாம் ஏவாளை அன்புடன் பார்க்க, அணைக்க அதனைத் தொடர்ந்து நடந்ததின் விளைவே இன்றைய மனித சமுதாயம். கடவுளின் எண்ணத்தில் பாம்பு ஒரு கெட்ட பிராணி. ஆதாம் எவாள் மனதிலோ பாம்பு அவர்களை சேர்த்து வைத்த ஒரு தேவ லோகத்து ராணி. இது விக்கிபீடியாவில் கண்ட செய்தி..
காடுகளில் தனித் தனியே சுற்றித் திரிந்த ஆதி மனிதன் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து வாழ ஆரம்பித்தது கிருஸ்து பிறப்பதற்கு சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்துதான். மனிதன் கூட்டம் கூட்டமாக வாழ ஆரம்பித்தது நதிகளைச் சுற்றிதான். முதலில் மெஸபொடோமியாவில் (இன்றைய ஈராக்கும், சிரியா, துருக்கி, ஈரான் இவைகளின் சில பகுதிகளும் சேர்ந்தது) ஆரம்பித்தது மனித சமுதாயம். பின்னர் எகிப்து நாட்டில் உள்ள நைல் நதிப் பிரதேசம், இந்தியாவில் உள்ள சிந்து நதிப் பிரதேசம் என்று மனிதன் நதிகளைச் சுற்றியே வாழத் தொடங்கினான்.
அப்படி வாழ ஆரம்பித்த மனிதர்கள் மனதில் எல்லாம் பாம்பிற்கு ஒரு நீங்காத இடம். எப்படி எனப் பார்க்கலாம்.
மெஸபொடோமிய இதிகாசங்கள் படி லிலித் என்பவளொரு ஒழுக்கம் கெட்ட பெண். புயலின் சின்னம் அவள். வியாதிகள், இறப்பு அவற்றுக்கும் காரண கர்த்தா அவளே.
அவள் மானம் காக்க உடலினைச் சுற்றிக் கொள்வது ஒரு பாம்பினைத்தான்.
http://en.wikipedia.org/wiki/File:Lilith_(John_Collier_painting).jpg
கிரேக்கர்களின் இதிகாசங்கள் படி பாம்பு மிகவும் கெட்ட ஜந்து. மெட்யூஸா என்பவள் மிகக் கொடியவள். அவள் தலையில் மயிர்களுக்குப் பதிலாக பாம்புகள் இருக்கும்.
மெட்யுஸா
அவர் கழுத்தில் இருப்பது கார்டெர எனப்படும் அமெரிக்க நாட்டு ஓலைப் பாம்பு.
இன்நாளைய மெட்யுஸா
எகிப்திய சரித்திரத்தில் பாம்புகளுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. அவை ஒரு கடவுளாக வழிபடப் பட்டன. எகிப்திய மன்னர்களான பாரோக்களின் மகுடத்தில் இடம் பிடித்தவை பாம்புகள்.
எகிப்தியர் பாம்புகளைக் கெட்ட காரியங்களுக்கும் பயன் படுத்தினர். எதிரிகளைக் கொல்வதற்கும், தற்கொலை செய்து கொள்வதற்கும் பாம்புகள் பயன் படுத்தப் பட்டன. (அழகி கிளியோபாட்ராவின் தற்கொலை ஒரு உதாரணத்திற்கு.)
சிந்து நதி சமுதாயம் பற்றிக் கேட்கவே வேண்டாம். பாம்புகள் இந்து மதத்தில் பின்னிப் பிணைந்த ஒன்று.
http://bab.viabloga.com/images/shiva.gif
பரமசிவனின் கழுத்தில் நல்ல பாம்பு ஆபரணம்
http://api.ning.com/files/WpaiUGhUGkbiQoMJ50KOv1CtoYM6uunijIsUkOln6Fhr-7cY49YE7trOayjj5F8O3XVUL3nGf0PbkNXX8Z*2ZqkSdC/941LakshmiVishnu.jpg
மகாவிஷ்ணு படுத்துறங்குவது பாம்புப் படுக்கையில்.
I
http://www.indianpath.org/images/_celebration.gif
கிருஷ்ணன் நர்த்தனமாடியது காளிங்கன் என்ற பாம்பின் தலைமேல்.
http://farm1.static.flickr.com/48/142832361_3fe2c4e86d_o.jpg
முருகனின் வாகனமான மயிலின் கால்களில் ஒரு நல்ல பாம்பு
இராமாயண காவியத்தில் இந்திரஜித் இலக்குமணன் மீது ஏவியது நாகாஸ்திரம். மகாபாரத யுத்தத்தில் கர்ணன் அர்ஜுனன் மீது விட்டதும் நாகாஸ்திரமே. அவளவு ஏன். இன்று நம் நாட்டிலும் இருக்கிறது ஒரு நாகா ஏவுகணை.
இதிகாச புராணங்களை விட்டு விஞ்ஞான உலகுக்கு வருவோம். மருத்துவ உலகில் நோயாற்றும் சின்னமான அஸ்க்ளிபியஸின் கைத்தடி என்றழைக்கப் படுவது ஒற்றைப் பாம்பொன்று சுற்றிய கைத்தடி.
கிரேக்கர்கள் வைத்தியத் துறைக்கு உபயோகிக்கும் சின்னம் காடூசியஸ் சின்னம். இது ஒரு கைத்தடியில் இரண்டு பாம்புகள் சுற்றி இருப்பது போல அமைந்த ஒன்று.
இந்திய மருத்துவக் கழகம், அமெரிக்க ராணுவ மருத்துவ பிரிவு இவற்றின் சின்னமும் காடூசியஸ் சின்னம்தான்.
அஸ்க்ளீபியஸ் சின்னம் காடூசியஸ் சின்னம்
இந்திய மருத்துவக் கழகம் மற்றும் அமெரிக்க ராணுவத்தின் மருத்துவப் பிரிவு இவற்றின் சின்னமான காடூசியஸ் சின்னம்
மருத்துவர்களுக்குத் தேவையான மருந்துகளைத் தயாரிக்கும் தொழில் துறையின் சின்னம் என்ன என்று தெரியுமா? ஹைஜியாவின் கோப்பை (Bowl of Hygieia). ஹைஜியா என்பவள் உடல் நலம் காக்கும் கிரேக்க பெண் தெய்வம்.
ஹைஜியாவின் கோப்பை
பாம்புகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள தொடர்பு ஒரு பின்னிப் பிணைந்த தொடர்புதானே?
பாம்புகளைப் பற்றி எழுதும்போது பாம்புகளுக்கும் மனிதனுக்கும் ஆண்டாண்டுகளாக இருந்துவரும் தொடர்பு பற்றி எழுதாது என் தவறுதானே அதை இப்போது ஓரளவுக்கு சரி செய்து விடேன் என நினைக்கிறேன்.
இத்துடன் இந்தத் தொடர் நிறைவு பெறுகிறது.
நடராஜன் கல்பட்டு
கனவிற்கு நன்றி பதிவில் உள்ள இணைப்புகளுக்கும்...
ReplyDelete