பவள சங்கரி
சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம்
(பெரிய புராணம்) - 143
கேடு மாக்கமுங் கெட்ட திருவினார்
ஒடுஞ் செம்பொனு மொக்கவே நோக்குவார்
கூடு மன்பினிற் கும்பிட லேயன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்.
குறைவதும் மிகுவதுமில்லாத என்றும் நிலைத்த செல்வத்தை உடையவர்கள், மண் ஓட்டையும் பசும் பொன்னையும் ஒன்று போலவே காண்பவர்கள்;
இறைவனை மனத்திலே கூட்டி வைக்கும் அன்பு மேலீட்டினால் அவனை வழிபடும் பிறப்பு ஒன்றேயன்றி, நிலையில்லாத செல்வத்தையும், சொர்கத்தையும் கூட விரும்பாத வன்மையுடையார். அதாவது தெய்வத் தன்மையாய் என்றும் இறவாத இன்ப அன்பு நிலையுடையவர்கள். பிச்சைபுக்கு உண்ணும் நிலையையும் , செம்பொன், முத்து, வைரம், வைடூரியம் என எத்தகைய செல்வமாயினும் அதனை விரும்பாது, அடியவர்கள் இவ்விரண்டு நிலையிலும் மனம் மாறாது ஒன்று போலவே தம்பணி செய்து நிற்பர்.
No comments:
Post a Comment