பவள சங்கரி
தந்தை ஒரு சீனத்துச் சுவர்
வெறும் கற்களாலான சுவரல்ல
இரும்புக் கோட்டை அமைத்த சுவர்
வீசும் புயலும் தகிக்கும் தீக்கனலும்
அண்டவிடாது அடைகாப்பவன்
குருதியை வியர்வையாக்கிப் பாசமாய்
வளர்ப்பவன்.
மூச்சிலும் பேச்சிலும் முழுமையாய்
எம்மைச் சுமந்தவன்
சேற்றிலும் சகதியிலும் உழன்றாலும்
மாற்று குறையாமல் கொடுத்தவன்
மூட்டிய தீயில் மூச்சிறைக்க வாடினாலும்
வாட்டமிலாமல் எமை வளர்த்தெடுத்தவன்
தனக்கென ஏதும் கொள்ளாமல் முற்றிலும்
பிள்ளைகளுக்கென நாளும் வாழ்பவன்
ஏச்சும் பேச்சும் தானேயுண்டு நீச்சமில்லா
நினைவனைத்தும் நிதமும் ஊட்டியவன்
உச்சம் அனைத்தும் எமக்கெனக்கொடுத்து
மிச்சம் மட்டுமே தமக்கெனக்கொள்பவன்
பேரிடர் பெருத்த சேதமேற்படுத்தியபோதும்
ஓரிடரும் எமை அணுகாது காத்தவன்
ஊனொளி உருக்கி உள்ளொலி பெருக்கி
பாரினில் எமையே படைத்திட்டாய்
தேரினில் நாளும் வலம்வரும் ஈசனின்
நேசமாய் எமை மாற்றிவிட்டாய்!
கல்பகோடி காலமும் எமைக்காக்கும்
வரமருள்வாயே! எம் தந்தையே!
வணங்குகிறேன் உம்மையே!!!
தந்தை ஒரு சீனத்துச் சுவர்
வெறும் கற்களாலான சுவரல்ல
இரும்புக் கோட்டை அமைத்த சுவர்
வீசும் புயலும் தகிக்கும் தீக்கனலும்
அண்டவிடாது அடைகாப்பவன்
குருதியை வியர்வையாக்கிப் பாசமாய்
வளர்ப்பவன்.
மூச்சிலும் பேச்சிலும் முழுமையாய்
எம்மைச் சுமந்தவன்
சேற்றிலும் சகதியிலும் உழன்றாலும்
மாற்று குறையாமல் கொடுத்தவன்
மூட்டிய தீயில் மூச்சிறைக்க வாடினாலும்
வாட்டமிலாமல் எமை வளர்த்தெடுத்தவன்
தனக்கென ஏதும் கொள்ளாமல் முற்றிலும்
பிள்ளைகளுக்கென நாளும் வாழ்பவன்
ஏச்சும் பேச்சும் தானேயுண்டு நீச்சமில்லா
நினைவனைத்தும் நிதமும் ஊட்டியவன்
உச்சம் அனைத்தும் எமக்கெனக்கொடுத்து
மிச்சம் மட்டுமே தமக்கெனக்கொள்பவன்
பேரிடர் பெருத்த சேதமேற்படுத்தியபோதும்
ஓரிடரும் எமை அணுகாது காத்தவன்
ஊனொளி உருக்கி உள்ளொலி பெருக்கி
பாரினில் எமையே படைத்திட்டாய்
தேரினில் நாளும் வலம்வரும் ஈசனின்
நேசமாய் எமை மாற்றிவிட்டாய்!
கல்பகோடி காலமும் எமைக்காக்கும்
வரமருள்வாயே! எம் தந்தையே!
வணங்குகிறேன் உம்மையே!!!
சிறப்பு...
ReplyDeleteஇனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்...
சிறப்பு...
ReplyDeleteஇனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்...
தந்தையர் தின இனிய வாழ்த்துகள்..
ReplyDeleteஅருமையான பகிர்வு ! இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள் என் சார்பிலும்
ReplyDeleteஇங்கே உரித்தாகட்டும் அம்மா .