வான் மேகம்!


பவள சங்கரி


தோட்டமெலாம் மலர்க்கூட்டம்
சோலையெலாம்  வண்ணக்கோலம்
வண்டினங்களின் ஒயிலாட்டம்
மாலையிலும் காலையிலும் கனிரசவூட்டம்!

மலரொன்னு நீண்டுவளைந்து 
மனசோடு மணம் பரப்புது
என் தோட்டத்து ரோசாவே..
அழகு வண்ண ராசாவே
பழகு தமிழ் பரவசமே
பாசவினை பாரிஜாதமே
என்றெலாம் வார்த்தைஜாலம்
போர்வையில் மறைந்துகிடக்கு
போர்வையும் பொலபொலன்னு 
செல்லரிச்சிப் போய் இருக்கு
வானமும் பொத்துக்கிட்டு
உப்புநீராய் உகுத்துப்போகுது
இடுகாட்டின் இடையிலொரு
வெள்ளைமலர் பூத்துக்கிடக்கு
முள்ளுசூழ்ந்த அந்த முத்தானபூவு
தள்ளிநின்னு சாகசம் பாக்குது
தரிசான பூமியிலயும் பூத்தபூவு
கதிரொலியில் ஜொலித்தபூவு
சவமாய்க் கிடந்ததைத் தெய்வமாக்குது
எட்டிநின்னு ஏளனம் செய்யும்
ஏட்டுச்சுரைக்காய் எதார்த்தம்பேசி
ஊசிமுனையில் உன்னதமாகுது
கவிக்குடிலில் கதையாயிரம்பேசி
கட்டாந்தரையை சோலையாக்கப்பாக்குது
கள்ளும்முள்ளும் மலிந்த மண்ணதில்
கள்ளியும் ஊமத்தையும் கருகிக்கிடக்க
வேலும்வேம்பும் வெந்தெரியாமல் கிடக்குது
பாலும்பாகும் பந்தமில்லாமல் போகுது
அனிச்சமும் அனல்வீசும் வெப்பத்தில்
மானும்மயிலும் அதிசயித்து வேகுது
ஏகாந்தவானமாய் உசந்துநிக்கும்
ஊருசனம் போற்றும் நறுமணம்
 தென்றலாய் பொழியும் வான்மேகம்!!


Comments

  1. ஆகா... ஆகா... படங்களும் மனத்தைக் கவர்ந்தன...

    பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

உறுமீன்

பதின்மப் பருவத்தின் வாசலிலே

அழகு மயில் ஆட ........ !