Wednesday, December 24, 2014

இனிய கிறித்துமசு தின நல்வாழ்த்துகள்







உண்மை, அன்பு மனித நேயம் போன்ற அனைத்தையும் போதித்தவர் இயேசுபிரான். இயேசுபிரான் பிறந்த தினம் கிறித்துமசு விழாவாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தேவ குமாரன் அவதரித்த இந்நன்னாளில் நாமும் நம் சக மனிதர்களிடம் அன்பு பாராட்டி, ஒற்றுமையும்,  நல்லிணக்கமும் வளர்த்து நாட்டில் போட்டி, பொறாமைகள் அகன்று, பூரண அமைதி நிலவவும் உறுதி எடுப்போம். மகிழ்ச்சிகரமான இந்த கிறித்துமசு நாளில் தமிழகத்திலும், உலகெங்கிலும் உள்ள  அனைத்து கிறித்துவ பெருமக்களுக்கும் நம் வல்லமையின் மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். மனித நேயத்தை வளர்க்கும் இணைப்புச் சங்கிலி அன்பு ஒன்றுதான் என்பதே இயேசுபிரானின் அவதார நோக்கம் மற்றும் அவருடைய போதனையும் அதுதான். நம் மனங்களில் அன்பும் அமைதியும் தழைத்தோங்கி பிரிவினைகளும், பேதங்களும் மறைந்து சமத்துவமும், சகோதரத்துவமும் தழைத்தோங்க மனமார பிரார்த்திப்போம். 

2 comments:

  1. நம் மனங்களில் அன்பும் அமைதியும் தழைத்தோங்கி பிரிவினைகளும், பேதங்களும் மறைந்து சமத்துவமும், சகோதரத்துவமும் தழைத்தோங்க மனமார பிரார்த்திப்போம். //
    மனமார பிரார்த்திப்போம்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்...

    ReplyDelete