Wednesday, January 28, 2015

மீகாமனில்லா நாவாய்!






மிதமான சாரலில் இதமாய் நனைந்தபடி
நடமிடும் அழகில் இலயித்த வான்மேகம் 
வளமாய் பொழிந்து வசமாய் வீசிடும்
வளியின் வீச்சில் வெகுதூரம் விரைந்தோடி
மௌனலையினூடே கிழித்துச்செல்ல எத்தனிக்கும்

மீகாமனில்லா நாவாய்  நீராழியலையின்
மிதவையாய்  வெள்ளத்தினூடே ஓயாமல்
 காற்றின் திசையில் சிறகடித்தபடி
 ஆழிப்பேரலையின் அதிர்வில் திசைமாறி 
மதங்கொண்ட களிறே போலோடியது

நீரடிப்பதால் அழுவதில்லை மீன்கள்
பேரிடியால் வீழ்வதில்லை நீரலைகள்
குத்தீட்டியால் குத்திக் கிழித்தாலும்
குழம்பித் திரியா வான்மேகங்கள் 

முகமூடியணியும்  விடையறியா வினாக்கள் 
அக்கரை செல்ல அக்கறையாய்
கலங்கரை விளக்கை நாடும் 
வெள்ளோட்டத்தில் கரை காணா  
விண்ணேகும் விதியறியா நாவாயது!


நன்றி ; திண்ணை



1 comment:

  1. // நீரடிப்பதால் அழுவதில்லை மீன்கள்
    பேரிடியால் வீழ்வதில்லை நீரலைகள் //

    ஆஹா...!

    ReplyDelete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...