ஈடில்லா ஈசன்!


பவள சங்கரி
திருவடிச் சதங்கை ஜல் ஜல்லென்று சிணுங்க
அருள்வடிவான அன்னை ஆடிவரும் வேளை
கருவறையில் கற்பகமாய் காட்சியளித்து
அருமறைகள் தானருளி வேதப்பொருளானாளே!!! 


பழமைக்கோலம்  பரிதியின் தவம்
புதுமையில் புகுந்தால் புவிநாசம்
பழமையும் புதுமையும் பரிதிக்கேது
சுட்டெரிக்கும் சூதையும் சூழ்வினையையும்!!அர்த்தநாரியாய் ஆருத்ரனாய் ஆதவனாய்
இடுகாட்டு நாயகனாய் இகம்பர அதிபதியாய்
ஈரேழுலகின் ஈடில்லா ஈசனான ஞானியே
ஊழிமுதல்வனாய் உருத்திரனாய் உறைவோனே!!!
                                                                  

Comments

Post a Comment