பவள சங்கரி
நட்பினிசை சுகந்தமாய் மலரும் நாளும்
நயமான கவியமுதின் சாமரமாகும்
வேரூன்றி கிளைபரப்பி விருட்சமாய் விரிந்து
வேதமாய் மலரும் நட்பூக்களாய்
சொல்விளங்கும் சுவையமுதாய் நித்தமும் அங்கே
சொற்களஞ்சியம் எழில் கொஞ்சும்
விண்ணோரும் வியந்து போற்றி அருள்மழையாய்
விளக்கேந்தி உள்ளொளி மீட்டுவர்!
கவிதையில் காரிருள் நீக்கும் உந்தன்
கண்மலர்ந்தால் அது காவியமாகும்
அன்பும் அமைதியும் அருந்தவமும் அமுதமாய்
அளவிலா அற்புதமாய் வலம்வரும்
புன்னகைசூடி புவியின் புதுமலராய் நித்தியமாய்
புத்தொளியுடன் வாழ்க பல்லாண்டு!
ஆகா...! படமும் அருமை...
ReplyDelete