பவள சங்கரி
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அன்பு மகன் செந்தில்.
வெற்றிவாகை சூடிவா மகனே!
நம்பிக்கையோடு எதிர்கொள் சவால்களை
சுதந்திரமாகத் தேர்ந்தெடு உன் போட்டிகளை
நிரந்தரமாக வீழ்த்திவிடு அதன் சாகசங்களை
பம்பரமாகச் சுழன்று வென்றுவிடு சீற்றங்களை
புன்னகை சூடியே புவியை ஆளலாம்
இன்னல் விலக்கலாம் இதமான சொல்லால்
வள்ளல் ஆகலாம் வளமான செய்கையால்
இதயம் மலரலாம் மதியூகச் சிந்தையால்
கள்ளம் இல்லா உள்ளம் வேண்டுவோம்
கருணை பொங்கும் இதயம் நாடுவோம்
மானம் பெரிதென நித்தம் தவமிருப்போம்
வாழும் காலமெலாம் சத்தியம் காத்திடுவோம்
துன்பமும் துரும்பாக்கும் சுடர் ஏற்றுவோம்
நித்தமும் உள்ளத் தூய்மையை சுவாசிப்போம்
பந்தமும் பாசமும் கட்டுக்குள் வைப்போம்
நேசமும் நினைவும் நலமே காப்போம்
மொழி கற்பித்த அன்னைக்கு நீயும்
கணினி மொழியும் பாசமொழியும்
கனிவுடனே கற்பித்தாய் மொழிக்கடன்
தீர்ந்தாலும் உனதன்பென்றும் தீராக்கடன்தானடா!
வாழ்க நீ பல்லாண்டு! வளமும் நலமும் பெற்று
தரணி போற்றும் தமிழும் அமிழ்தும் போல!
மங்கலமாய் மனைவி மக்களுடன் மங்காப்
புகழுடன் மாமனிதமாய் வாழ்க வாழ்கவே!!
ஒவ்வொரு வரியுமே சிறப்பு... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமிக்க நன்றி சகோதரரே. மகனுக்கு இன்று பிறந்த நாள்.
Delete