ஊக்கமளிக்கும் அங்கீகாரம் - நன்றி தினமணி நாளிதழ்!

பவள சங்கரி

இனிய வணக்கம் நண்பர்களே!

"சிறுவர்களின் அறிவுத்திறனையும், நற்பண்புகளையும் வளர்க்கும்விதமாகவும், அவர்களை ஆர்வத்துடன் படிக்க வைக்கும் வகையிலும், எழுதப்பட்டுள்ள சிறந்த நூல்”இன்றைய தினமணி நாளிதழில் நூல் அரங்கம் பகுதியில், என்னுடைய ‘கதை கதையாம் காரணமாம்’ என்ற சிறுவர் நூலிற்கு அற்புதமான அங்கீகாரம் வழங்கியிருப்பது உற்சாகமளிக்கிறது! மிக்க நன்றிங்க. என்னுடைய அடுத்த படைப்பிற்கான ஊக்கத்திற்கு ஆதாரம் இத்தகைய பாராட்டு.. நாளிதழில் வாசித்த நண்பர்கள் இது பற்றி யாராவது சொல்லியிருந்தால் மகிழ்ந்திருப்பேன்... பழனியப்பா பதிப்பகத்திலிருந்து ஐயா முத்துக்குமாரசாமி அவர்கள் விசயத்தை தெரிவித்து, பாராட்டி மகிழ்ந்தது மேலும் உற்சாகமளிக்கிறது. நன்றி ஐயா.


Comments

  1. மிகவும் மகிழ்ச்சியான செய்தி. மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment