Friday, August 14, 2015

சுதந்திர தின நல்வாழ்த்துகள்!






ஒரு முறை நான் வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் ஒரு புறமும் மற்றொருபுறம் நெடிதுயர்ந்த சுவரும் இருந்த ஒரு இடத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தேன்.  நிறைய குரங்குகள் வாழ்ந்து கொண்டிருந்த இடம் அது. வாரனாசியின் குரங்குகள் மிகப்பெரும் காட்டுமிராண்டிகளாகவும், சில நேரங்களில் கடுகடுப்பாகவும் இருக்கக்கூடியவை.  இப்போது என்னை தங்கள் சாலை வழியாக கடந்து செல்ல அனுமதிக்கக்கூடாது என்று மனதில் ஏற்றிக்கொண்டதால், அவைகள் அலறிக்கொண்டும், கிறீச்சிட்டுக்கொண்டும், நான் அங்கு நடந்தபோது என் பாதங்களை பிராண்டிக்கொண்டும் இருந்தன. அவைகள் மிக நெருக்கமாக வந்து என் மீது மோத எத்தனித்தபோது நான் ஓட ஆரம்பித்தேன். ஆனால் நான் எவ்வளவு வேகமாக ஓடினேனோ அதைவிட வேகமாக ஓடி வந்த அந்த குரங்குகள் என்னை கடிக்க ஆரம்பித்தன. என்னால் தப்பிக்கவே இயலாது என்ற நிலை வந்தபோது, ஒரு வழிப்போக்கர் என்னை அழைத்து, “அந்தக் காட்டுமிராண்டிகளை எதிர்கொள்” என்றார். நான் திரும்பி நின்று அந்த குரங்குகளைப் பார்த்தேன், அவைகள் பின்னால் தள்ளிச்சென்றதோடு இறுதியாக ஓடியும் மறைந்தது.

இதுதான் நம் வாழ்க்கைக்கான பாடம் - கொடூரங்களை எதிர்கொள்ளுங்கள், துணிச்சலுடன் எதிர்கொள்ளுங்கள். அந்தக் குரங்குகளைப் போன்று நம்முடைய வாழ்க்கைத் துயரங்களும் நாம் அதன்முன் துணிந்து நின்றால் அவைகள்  புறமுதுகிட்டு ஓடும். நமக்கு சுதந்திரம் வேண்டுமென்றால், அதனை எதிர்கொண்டு வெற்றியடையும் இயல்பினால் மட்டுமே முடியுமே தவிர ஒருபோதும் அதனை விட்டு விலகி ஓடுவதால் அல்ல. கோழைகள் ஒருபோதும் வெற்றியைச் சந்திப்பதில்லை.  நம் அச்சம். துன்பம் மற்றும் அறியாமை என அனைத்தும் நம்மை விட்டு விலகி ஓட வேண்டுமென்று நினைத்தால் அவைகளை எதிர்த்துப் போராடவேண்டும். 

சுவாமி விவேகானந்தர்

நன்றி ; வல்லமை

No comments:

Post a Comment

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...