Sunday, September 27, 2015

தூரனின் மதிநுட்பம்!





மென்மையாகவும், நுட்பமாகவும் பேசும் திறன் பெ. தூரனுக்கு இளமையிலேயே வாய்த்திருந்தது. மாணவப் பருவத்தில் ‘பித்தன்’ என்ற இதழை நண்பர்களுடன் நடத்தி வந்தார் தூரன். இது திரு.வி.க.வின் அச்சகத்தில் அச்சிடப்பட்டது. இதழைப் பதிவு செய்ய திரு.வி.க. வும், தூரனும் தலைமை குற்றவியல் நடுவர் அவர்களிடம் சென்றனர். அவர் ஆங்கிலேயர். இந்த இதழோ தேசப்பற்று மிக்க இளைஞர்களால் ‘பித்தன்’ என்று பெயரிடப்பட்டிருந்தது. குற்றவியல் நடுவர், 'What do you mean by Pithan?' என்று தூரனைக் கேட்டார். திரு.வி.க. அவர்கள், இந்த இளைஞன் என்னதான் பதில் சொல்லப் போகிறானோ என்று சிந்தனை வயப்பட்டார். ஆனால் தூரனோ சற்றும் அசராமல், துளியும் கலவரமின்றி, 'It is one of the names of God Shiva'என்று பதிலளித்தார். இதழ் பதிவு பெற அனுமதி கிடைத்தது என்று சொல்லவும் வேண்டுமோ? மாணவர் தூரனின் அறிவார்ந்த பதிலால் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்த திரு.வி.க. தூரனின் மதி நுட்பத்தைக் கண்டு உளமார பாராட்டினாராம்!


சிற்பி. ம.ப. பெரியசாமித் தூரன் வரலாற்று நூலிலிருந்து படித்ததில் பிடித்தது!

இன்றைய இயந்திர உலகில் குழந்தைகள் பற்றியும் அவர்களது மனச்சிக்கல்கள் பற்றியதுமான புரிதல் என்பது கானல்நீராகி வருகிறது. மனிதம் தழைப்பதற்குரிய எந்தவொரு முயற்சியும் குழந்தைப் புள்ளியிலிருந்துதான் தொடங்கவேண்டும். மனிதமனம் பற்றிய முடிச்சுகளும் அவிழ்க்கப்பட வேண்டியது அத்தியாவசியத் தேவையாகிறது. - ஒவ்வொரு பெற்றோரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்!

No comments:

Post a Comment