Thursday, February 4, 2016

’கடைச்சங்கத்தில் கொங்கு கலாச்சாரம்’ - நூல் வெளியீடு















’கடைச்சங்கத்தில் கொங்கு கலாச்சாரம்’ நூல் உலகத் தமிழினத் தலைவர் திருமிகு பழநெடுமாறன் அவர்களால் சிறப்பாக வெளியிடப்பட்டது. நூல் அவர் கையில் கிடைத்த குறுகிய கால அவகாசத்திலேயே நூலின் தலைப்பினாலேயே தாம் மிகவும் ஈர்க்கப்பட்டதால், வாசிக்கும் ஆர்வம் ஏற்பட்டு விரைவில் பெரும்பகுதி படித்ததாகவும், பல நூல்கள் அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருப்பதைப் போல் அல்லாமல் இந்நூல் ஒரு புதிய கோணத்தில் ஆய்வு செய்யப்பட்டிருப்பதைத் தாம் மகிழ்ந்து வரவேற்பதாகவும், அதற்காகவே தமது மனம் நிறைந்த பாராட்டுகளை வழங்குவதாகவும் ஐயா அவர்கள் பேசியது மிகவும் உற்சாகம் அளிக்கக்கூடியதாக இருந்தது. நூல் பற்றிய பல விளக்கங்களை பொறுமையாகக் கேட்டறிந்ததோடு விரிவாக எழுதுவதாகவும் கூறியுள்ளார். ஐயா அவர்கள் அடுத்த ஆய்வு நூலுக்கான அச்சாரமும் போட்டு வாழ்த்தியது மன நிறைவை ஏற்படுத்தியது. நிறை குடங்கள் என்றும் நீர் தளும்புவதில்லை என்று முழுமையாக உணர்ந்த தருணமும் இதுதான்....






நிகழ்ச்சியில் தவத்திரு மருதாச்சல அடிகளார் (இளைய பட்டம், பேரூர் ஆதீனம், கோவை) அவர்கள் ஆன்மீகமும், சைவ நெறியும் தமிழ் மொழி வளர்க்கும் விதம் குறித்து மிக அழகாகப் பேசி சிந்திக்க வைத்தார். ஐயா பழ நெடுமாறன் அவர்கள் யுனெசுகோவின் சமீபத்திய அறிக்கையின்படி அழியப்போகும் மொழிகளின் பட்டியலில் நம் தமிழ் மொழி 7 வது இடத்தில் உள்ளது என்பதை மிகுந்த வேதனையுடன் பகிர்ந்துகொண்டார். அப்படி நடக்காமல் இருக்க நாம் ஒவ்வொருவரும் தாய் மொழி மீது பற்றுகொண்டு பேணிக்காக்க முயலவேண்டும் என்ற வகையில் தொடர்ந்தார். பசுமை இயக்கத் தலைவர் மருத்துவர் ஜீவானந்தம் அவர்கள் ‘கடைச்சங்கத்தில் கொங்கு கலாச்சாரம்’ என்ற என் நூல் குறித்து பேசும்போது கொரியாவில் நம் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் வெகுவாக பரவியிருப்பது போன்று தாய்லாந்து, இந்தோநேசியா போன்ற பல நாடுகளில் பரவியிருப்பதையும் சுட்டிக்காட்டி சுவைபடப் பேசினார். மிக்க நன்றி அண்ணா....

No comments:

Post a Comment