‘சொல்லின் செல்வரின்’ சமுதாய அக்கறை!ஈரோடு கொங்கு கலையரங்கில் நேற்று (24/07/2016) சி.கே.கே. அறக்கட்டளை சார்பில், சமுதாய அக்கறை உள்ளதா என்பது குறித்த பட்டி மன்றம் நடந்தது. ‘சொல்லின் செல்வர்’ திரு சுகி.சிவம் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடந்த இந்த பட்டி மன்றத்தில் சமுதாய அக்கறை குறைந்துள்ளது என்ற அணியில் பேரா. ராமச்சந்திரன், திரு.மோகனசுந்திரம், பேரா. திருமதி.சாந்தாமணி ஆகியோரும், சமுதாய அக்கறை அதிகரித்துள்ளது என்ற அணியில் முனைவர்.சுந்தர ஆவுடையப்பன், திரு மணிகண்டன், வழக்கறிஞர் சுமதி ஆகியோரும் வாதிட்டனர். இலக்கிய அரங்கம் என்று ஆவலாகச் சென்றவர்களுக்கு சற்று ஏமாற்றம்தான். காரணம் வாதிட்ட அனைவரும் இலக்கியம் குறித்து ஏதும் பேசவில்லை. மேலோட்டமான வாதமாகவே இருந்தது. ஆனாலும் அனைவரின் வாதங்களும் சுவையாகவே அமைந்திருந்தது. இந்தக்குறையை நிவர்த்தி செய்யும்விதமாக நடுவர் திரு சுகி.சிவம் அவர்கள் தமது உரையில் ஆழ்ந்த பல கருத்துகளை முன்வைத்தது பாராட்டிற்குரியது

Comments

Popular posts from this blog

உறுமீன்

யானைக்கும் அடி சறுக்கும்.............

கண்ணதாசனின் ‘சேரமான் காதலி'