Monday, July 25, 2016

வாசுகியாயணம்




1330 குறட்பாக்களும் இரண்டடியில் எழுதிவைத்த வள்ளுவப்பெருந்தகை, தமது மனைவி வாசுகி அம்மையாருக்காக எழுதிய குறள் மட்டுமே 4 வரிகளில் எழுதியுள்ளார்! இதோ:


அடியிற்கினியாளே, அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய் - அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும், பேதாய் இனிதாய்
என்தூங்கும் என்கண் இரவு.

இருக்காதா பின்னே, திருமணம் ஆன நாளிலிருந்து இறக்கும் தருணம் வரை திருவள்ளுவர் அன்றாடம் உணவு அருந்தும்போது தமதருகில் வைக்கச்சொன்ன ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும், ஒரு ஊசியும் எதற்கு என்ற கேள்வியே கேட்காமல் அன்றாடம் வைத்துக்கொண்டிருந்தாராம்! காலம் முழுவதும் விளங்காமலே செய்த பணிவிடைக்கு தமது உயிர்பிரியும் இறுதி நேரத்தில் விளக்கம் கேட்டாராம் அம்மையார்.. 

அதாவது, ஐயனுக்கு உணவு பரிமாறும்போது சாதப்பருக்கை கீழே இறைந்துவிட்டால் அதை ஊசியால் எடுத்து தண்ணீரில் அலம்பி சாப்பாட்டில் சேர்த்துக்கொள்வதற்காக வைக்கச்சொன்னாராம். ஆனால் இறுதிவரை ஒருநாள் கூட அதற்கான தேவை ஏற்படவேயில்லையாம்!

No comments:

Post a Comment