மரத்துக்குமரம் தாவுமுன்னை
தடுக்க எண்ணமில்லை
ஒவ்வொரு மரமும்
ஏதோ படியளக்கிறது எனும்
கனவைக் கலைக்கும் துணிவில்லை
ஒவ்வொரு தாவலிலும் ஒல்லை
ஒருதளிர் துவண்டு வலுவிழக்கிறது
அனைத்தும் நிர்வாணமாய் ஒளிரும்
தட்டொளியின் விகல்பமிலா காட்சிகள்
மாயவேட்கையில் இடுக்கண் களையும்
மாதவம் மறைபொருளாகிறது
உள்ளதை உள்ளபடி உரைக்கும் தட்டொளி
கள்ளத்தையும் காட்டிடும் தெளிவுறவே
அகத்தில் உள்ளதையும் காட்டிடும்
காட்சிப்பிழையென மறைக்கவிடாது
வேற்றுருவாய் விலகி
விதியென்று மருகி
வீணரென்று வெதும்பி
விருட்டென்று பறந்துவிடும்!
No comments:
Post a Comment