ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ…
ஆராரோ ஆரிரரோ…
குழந்தையின் தாலாட்டு! இந்த இரு சொற்களில் எத்தனைத் தத்துவங்கள்!
தால் என்பது நாவைக் குறிக்கும் சொல். நாவை ஆட்டி இசையாய் எடுத்து, ஊட்டி செல்லக்குழந்தையை ஆராட்டுதல் “தாலாட்டு” எனப்படுகிறது. இந்தத் தாலாட்டில் வல்லினமும், மெல்லினமும் தவிர்த்து, இடையினத்தில் மென்மையாக இசைப்பதே இனிய தாலாட்டுப் பாடலாம். (கசடதபற வல்லினம், ஙஞணநமன மெல்லினம், யரலவழள இடையினம்) இதுவே குழந்தைகளை அமைதியாக உறங்கச்செய்து, மூளை வளர்ச்சியையும் ஊக்குவித்து, குழந்தையை அமைதியான சூழலில் வளரச்செய்கிறது. வன்மையான வல்லினப்பாடல் குழந்தையை அச்சுறுத்தும். மென்மையான மெல்லினப்பாடல் குழந்தையின் அழுகைச்சத்தத்தில் அமிழ்ந்துவிடக்கூடும். ஆகவே இடையினத்தில் இசைக்கும் பாடலே குழந்தைக்கு ஏற்றதாகும். தமிழரின் தன்னிகரில்லா தாலாட்டு, தரணியில் தனித்து நிற்பதன்றோ! வாழ்க தமிழ்! வாழ்க தமிழர் தம்பெருமை!
ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ…
கண்ணே கண்மணியே
ஆரடிச்சு நீ அழுதே
அடிச்சாரை சொல்லியழு
ஆராரோ ஆரிரரோ…
ஓடும் மான் கண்ணோ என் கண்ணே
நீ கவரிமான் பெற்ற கண்ணோ
புள்ளி மான் கண்ணோ என் கண்ணே
நீ புத்திமான் பெற்ற கண்ணோ
முத்தோ ரத்தினமோ என் கண்ணே
நீ தூத்துக்குடி முத்தினமோ…
முல்லை மலரோ என் கண்ணே
நீ அரும்புவிரியா தேன்மலரோ..
கண்ணே கண்ணுறங்கு
கனியமுதே நீ உறங்கு….
ஆராரோ ஆரிரரோ…
கண்ணே கண்மணியே
ஆரடிச்சு நீ அழுதே
அடிச்சாரை சொல்லியழு
ஆராரோ ஆரிரரோ…
ஓடும் மான் கண்ணோ என் கண்ணே
நீ கவரிமான் பெற்ற கண்ணோ
புள்ளி மான் கண்ணோ என் கண்ணே
நீ புத்திமான் பெற்ற கண்ணோ
முத்தோ ரத்தினமோ என் கண்ணே
நீ தூத்துக்குடி முத்தினமோ…
முல்லை மலரோ என் கண்ணே
நீ அரும்புவிரியா தேன்மலரோ..
கண்ணே கண்ணுறங்கு
கனியமுதே நீ உறங்கு….
http://www.vallamai.com/?p=72162
No comments:
Post a Comment