மனிதருக்கு அறிவியல் ஞானம் வளரும்போது மூட நம்பிக்கைகள் ஒழிந்துவிடுகின்றன. முன்னொரு காலத்தில் சீன நாட்டில் மழை இல்லாமல் வறண்டு கிடந்த சமயத்தில் மழை வேண்டி வருணபகவானுக்கு யாகமும், விரிவான சடங்குகளும் செய்யும்போது ஒரு அழகான கன்னிப்பெண்ணை தண்ணீர் டிராகனுக்காக பலி கொடுத்தார்களாம். ஆனால் விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட 1960 – 61 காலகட்டங்களில் செயற்கை மழை மூலமாக வானிலையையே மாற்றத் துவங்கிவிட்டனர்.
சீனாவின் செயற்கை மழைத்திட்ட நிபுணர் சான் சியாங்கின் கருத்து இதோ: “செயற்கை மழை பெய்யும் போது, திடீரென்று பிரளயம் எல்லாம் ஏற்பட்டு விடாது. ராக்கெட்டுகள் விமானங்கள், பீரங்கிகள் ஆகியவற்றின் மூலமாக இரண்டு நாட்களுக்கு மேல் அரும்பாடுபட்டு மழையைக் கருத்தரிக்கும்படி மேகங்களைத் தூண்டுகின்றனர். அதாவது உப்பு, சில்வர் அயோடைடு போன்ற பனிக்கூழ் உருவாக்கும் பொருட்களை ஆகாயத்தில் தெளிக்கின்றனர். இதனால் உருவாகும் மேகங்களால் மழை பொழிகின்றன. இயற்கை மழைக்கும், செயற்கை மழைக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது. செயற்கை மழையில் விழும் மழைத் துளி, அளவில் பெரியதாக இருக்கும்” என்கிறார்.
No comments:
Post a Comment