ஆன்மீகம் பேசும்போது ஆன்மா ஒளி பெறுவதால் அளவிலா ஆனந்தமும், ஓர் ஆழ்ந்த அமைதியும் பேச்சில் கூட வெளிப்படும் போல.. தாவரத்தின் வளர்ச்சிக்கு நீர், காற்று, ஒளி தேவை. நீர், காற்று, உணவு, சூரிய ஒளியுடன் வளரும் நம் ஜீவ உடல். நம் ஆத்மாவின் வளர்ச்சிக்கு நாம் அளிக்க வேண்டிய சக்தி எது? பவானி, சத்தியத்தின் சக்திநிலைச் சங்கம் , மெய்ஞ்ஞான தியான மையத்தின் தலைவர் கவாலியர் முனைவர் மதிவாணன் அவர்கள் சார்பில் ஸ்ரீலஸ்ரீ வாலைச்சித்தர் சுவாமிகள் மலேசிய நாட்டிலிருந்து வந்திருந்து, ஜூன் 9,10,11 ஆகிய நாட்களில் மலேசியா, கோலாலம்பூர், பத்துமலை, சுப்பிரமணியர் திருக்கோவிலில் நடைபெறும் அகில உலக ஆன்மீக மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்புவிடுக்கும் பொருட்டும் ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு ஆசி வழங்கினார்கள். இத்தகையதொரு அற்புதமான மேடையில் எனக்கும் ஒரு இடம் கிடைத்தது இறையருள் என்றே கொள்ளமுடிகிறது!. ஆன்மீக மாநாட்டில் கலந்துகொள்ள விரும்புவோர் கிழ்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.
98940 64755, 99440 77789.





No comments:
Post a Comment