“வல்லமை தாராயோ” - மாணவர் மாணவியர் கவிதைப் போட்டி

 சென்ற வாரம் 11.09.2017 - திங்கள் கிழமையன்று மாலை  பாரதி நினைவு நாளை முன்னிட்டு  ஸ்ரீராம் ஸ்போர்ட்ஸ் அகாடமி, நம் வல்லமை இணைய இதழ், லீட் மனிதவள மேம்பாட்டு பயிலரங்கு இணைந்து நடத்திய பாரதி விழா சிறப்பாக நடந்தது. நம் வல்லமை சார்பில் “வல்லமை தாராயோ”  என்ற தலைப்பில் மாணவர் மாணவியர் கவிதைப் போட்டியில் பரிசு பெற்ற குழந்தைகளுக்கு   பரிசாக நூல்கள்  வழங்கப்பட்டன. நிகழ்ச்சி மிகச்சிறந்த கவிஞரும், இலக்கியவாதியுமான ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் சிவக்குமார் அவர்கள் தலைமையில் , திரு சிவநேசன் (ராம்கே எலக்ட்ரிகல்ஸ்) திரு.ஸ்டாலின் குணசேகரன் அவர்களின் சிறப்புரையுடன், ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி தாளாளர் திரு சிவானந்தம், குடி நீக்கு மருத்துவ மையம், மருத்துவர் ஜீவானந்தம் , கவிஞர் இடக்கரத்தான், முனைவர் ரமேஷ், கவிஞர் சேலம் பாலன் ஆகியோர் முன்னிலையில் சிறப்பாக நடந்தேறியது. Comments

Popular posts from this blog

உறுமீன்

யானைக்கும் அடி சறுக்கும்.............

கண்ணதாசனின் ‘சேரமான் காதலி'