Saturday, September 30, 2017

கொரிய - தமிழ் கலாச்சார ஆய்வுகள் - கொரிய தூதரகத் தலைவர் திரு ஹூங் டே கிம்






சென்ற புதனன்று கொரிய - தமிழ் கலாச்சார ஆய்வுகள் தொடர்பாக கொரிய தூதரகத் தலைவர் திரு ஹூங் டே கிம் (Hyung Tae Kim, Consulate General of the Republic of Korea) அவர்களை நம் வி.ஐ.டி குழும கல்வி நிறுவனங்களின் வேந்தர் திருமிகு விசுவநாதன் அவர்களின் ஆதரவுடன் அடுத்த கட்ட பணிகள் தொடர்பாகச் சென்று சந்தித்து என் நூலையும் வழங்கி வந்துள்ளோம். வி.ஐ.டி. வேந்தர் ஐயா அவர்களுக்கு உளமார்ந்த நன்றி.


நம் தமிழ் மொழியின் பழமையையும் அதன் ஆணி வேரின் பரவலிலும் மிகுந்த ஆச்சரியமும் மதிப்பும் கொண்டு இன்று பல்வேறு நாட்டினரும் அதனை அறிந்துணர ஆரம்பித்துள்ளார்கள். சமீபத்தில் கொரிய தூதரகத் தலைவர் திரு ஹூங் டே கிம் (Hyung Tae Kim, Consulate General of the Republic of Korea) அவர்களைச் சந்தித்தபோது தமிழில் உள்ள என் அறிமுக அட்டையை கொடுத்தேன். அதில் உள்ள பெரிய எழுத்துகளில் வல்லமை என்ற சொல்லை எழுத்துக்கூட்டி வ - ல் - ல என்பதுவரை வாசித்தவர், அதற்குமேல் சற்றே வெட்கி, தனக்கு தமிழ் மொழி மிகவும் பிடிக்கும் என்றும் ஓரளவிற்குத்தான் தெரியும் என்றும் தாங்களும் தங்கள் பெற்றோரை தமிழர்கள் போலவே ‘அம்மா, அப்பா’ என்றே அழைக்கிறோம் என்பதையும் பெருமை பொங்கக்கூறினார்! நம் பழைய சடங்குகள், சம்பிரதாயங்கள் ஆகியவற்றின் ஒற்றுமைகள் குறித்தும் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார். மகிழ்ச்சியாக இருந்தது!

No comments:

Post a Comment