மூதின் மகளிர்வீரம், அஞ்சாமை, மனவுறுதி கொண்டாலும் இப்பெண்கள் போர்க்களம் நோக்கிச்சென்று போரிட்டவர்கள் அல்லர் என்கிறது புறநானூறு.

கெடுக சிந்தை; கடிதிவள் துணிவே
மூதின் மகளி ராதல் தகுமே;
மேநாளுற்ற செருவிற் கிவடன்னை,
யானை யெறிந்து களத்தொழிந் தனனே;
நெருநல் லுற்ற செருவிற் கிவள்கொழுநன்,
பெருநிறை விலங்கி யாண்டுப் பட்டனனே;
இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித் துஉடீஇப்
பாறுமயிற் குடுமி எண்ணெய் நீவி
ஒரு மகனல்ல தில்லோள்
செருமுக நோக்கிச் செல்கென விடுமே
புறநானூறு, 279
பாடியவர்: ஒக்கூர் மாசாத்தியார்
திணை: வாகை
துறை: மூதின்முல்லை
போரின் முதல் நாளிலேயே பகைவரின் யானையைக்கொன்று தானும் இறந்தான் தந்தை, மறுநாளே கணவனும் குதிரைகளைக் கொன்று தானும் மாண்டு போகிறான். ஆயினும் மூன்றாம் போர்ப்பறை ஒலித்தவுடன் சற்றும் மனங்கலங்காது, தயக்கமின்றித் தன் ஒரே மகனையும் துணிந்து போர்க்களத்திற்கு அனுப்புகிறாளாம் அந்த மூதின் மகள்.Comments

Popular posts from this blog

உறுமீன்

யானைக்கும் அடி சறுக்கும்.............

கண்ணதாசனின் ‘சேரமான் காதலி'