Monday, February 18, 2013

வாலிகையும் நுரையும் - கலீல் ஜிப்ரான் (12)



 

பவள சங்கரி


இப்புவியின் சுகங்களனைத்தையும் முழுமையாகத் தங்கு தடையின்றி அனுபவிக்கும் வகையில் துண்டாடிய புவனமதைத்   துறந்தவர் எவரோ அவரே துறவி.

சான்றோருக்கும், கவிவாணருக்கும் இடையே அங்கோர் பச்சைப்பசும்புல்வெளி இருக்கிறது; அந்தச் சான்றோரதைக் கடக்க நேர்ந்தால் விவேகியாகிறாரவர்; கவிவாணரதைக் கடக்க நேர்ந்தாலோ தீர்க்கதரிசியாகிவிடுகிறார்.

இருப்பினும் சந்தையில் தங்கள் தலைகளைக் கூடையில் சுமந்து கொண்டு, ”ஞானம்! விற்பனைக்கு ஞானம்!எனக்கூவித் திரியுமந்த தத்துவ ஞானிகளைக் கண்டேன் யான்.
பாவமந்த தத்துவ ஞானிகள்’. தம் இதயத்திற்கு உணவளிக்கும் பொருட்டு தம் சிரசையே விற்க வேண்டியதாகிறது.

Thursday, February 14, 2013

வெற்றிக் கனியை எட்டிப்பறிப்போம்! (3)


பவள சங்கரி


நிலையான குறிக்கோளும், தெளிவான சிந்தையும்!



 நாம் எல்லோருமே வாழ்க்கையில் வெற்றியாளர்களாக இருப்பதையே பெரிதும் விரும்புகிறோம். எங்கு வெற்றி, எதில் வெற்றி என்று நிலையான ஒரு குறிக்கோள் இருந்தால்தானே அந்த வெற்றிப் பாதையை நெருங்க முடியும். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை என்பது இலக்கு இல்லாத ஓர் பயணம் போன்றது. மேலோட்டமாக, பொத்தாம் பொதுவாக ஒரு குறிக்கோள் என்பதைவிட உறுதியான மற்றும் நிலையானதொரு குறிக்கோளைக் கொண்டிருத்தல் வேண்டும். அதற்குத் தெளிவான சிந்தனை வேண்டும். நாம் சாதிக்க நினைக்கும் விசயங்களை முதலில் பட்டியலிட வேண்டும்.


உதாரணமாக நம் இலட்சியம் குடியிருப்பதற்கு ஒரு அழகான வீடு கட்ட வேண்டும் என்றால், அந்த வீடு எந்த அளவில், எந்த இடத்தில், அதாவது நகரத்தின் மையப் பகுதியிலா அல்லது  நகர எல்லையை விட்டு அமைதியான ஒரு பகுதியிலா என்பது போன்றதோடு அதற்கான செலவு எவ்வளவு ஆகும் போன்ற அனைத்தையும் தெளிவாகப் பட்டியலிட வேண்டும். இதில் மிக முக்கியமானது நம் சக்திக்கு உட்பட்ட இலட்சியமாக இருக்க வேண்டியது. நம் தகுதிக்குத் தகுந்த குறிக்கோளை நிர்ணயிக்க வேண்டியது அவசியம். ஒரு சிறிய வாடகை வீட்டில் குடியிருக்கும் ஒரு அரசாங்கப் பணியில் இருப்பவரின் ஆசை அதைவிட சற்றே பெரிதான, கொஞ்சம் அதிகமான வசதிகளுடன் கூடியதான் ஒரு சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற தெளிவான குறிக்கோள் உடையவராக இருந்தால் அது சாத்தியமாவதில் பெரிய பிரச்சனை இருக்காது. தாம் செய்யும் வேலையை நல்ல விதமாகச் செய்வதோடு, கூடுதலான நேரப் பணியையும் (overtime) ஏற்றுக் கொள்ளலாம். எந்த வங்கியில் குறைந்த வட்டியில் கடன் கொடுக்கிறார்கள், அதைத் திருப்பிச் செலுத்தும் வழி எந்த அளவு சாத்தியம் போன்ற அனைத்தையும் தெளிவாகத் திட்டமிடல் அவசியம். இப்படி திட்டமிட்ட விசயங்களைத் தெளிவாக ஒரு குறிப்பேட்டில் பதிவிட வேண்டியதோடு அதனைத் தாமும், தம் குடும்பத்தாரும் அன்றாடம் அதிகமாகப் புழங்கும் இடத்தில் கண்ணில் படும்படியாக வைக்க வேண்டியது அவசியம். இது கேட்பதற்கு நகைச்சுவையாக இருப்பது போல இருக்கலாம். ஆனால் பல வெற்றியாளர்கள் இது போன்ற வழிமுறைகளை பின்பற்றியிருக்கிறார்கள் என்பது விசாரித்துப் பார்த்தால் அறியலாம். ஒரு வீடு கட்டுவது என்பது அந்த குடும்பத் தலைவன் மற்றும் சம்பாதிக்கும் மனைவி ஆகிய இருவரின் கையில் இருந்தாலும், ஓய்வு பெற்ற பெற்றோர் மற்றும் சிறிய குழந்தைகள் ஆகியோருக்கும் இந்த இலட்சியம் அறிந்திருந்தால் குடும்பத்திலோ அல்லதுதனிப்பட்ட முறையிலோ தேவையற்ற அதிகப்படியான செலவினங்களைக் குறைத்தும், அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தும் அந்த இலட்சியத்தை அடைவதற்கு பெரிதும் துணையாக இருப்பார்கள். அந்த இலட்சியத்தை முழுமையாகவும், சிறப்பாகவும் அடைவது எப்படி?

Wednesday, February 13, 2013

காதலின் வேதம்



பவள சங்கரி



 
காதலின் கீதம் – Song Of Love (Khalil Gibran) – மொழிபெயர்ப்பு




காதலர்களின் விழிகளும் யானே
இச்சையூட்டும் இன்பரசமும் யானே
மற்றுமந்த உளத்தின் ஊட்டமும் யானே
விடியலில் மலரும் மனமும்  முத்தமிட்டுத்தம் அமுதகத்தின்மீது கிடத்திக்கொள்ளும் அக்கன்னியவளையும் கொண்டதோர் ரோசாவும் யானே.


நிலையான செல்வத்தின் இல்லமும் யானே
இன்புறவின் துவக்கமும் யானே.
சாந்தம் மற்றும் கலக்கமின்மையின் தொடக்கமும் .யானே
இரமியத்தின் இதழின் மீதான் மென்னகையும் யானே
எம்மைத் தொடர்ந்து பற்றும் தருணமதிலந்த யுவன்தம் கடமையையும் மறந்து, அவர்த்ம் முழு வாழ்வும் இன்பக்கனாவின் நிதர்சனமாகிறது.

Monday, February 11, 2013

வாலிகையும் நுரையும் (11) - கலீல் ஜிப்ரான்



பவள சங்கரி


இரமியத்திற்கப்பால் எந்த மெய்ஞானமோ அன்றி  விஞ்ஞானமோ  இல்லை.
யானறிந்த ஒவ்வொரு உயர்ந்த மனிதனும் ஏதோ சிறிய அளவிலேனும் ஒப்பனை செய்திருந்தனர்; மேலும் அந்தச் சொற்பமே  அவனை மந்தமாக இருப்பதிலிருந்தோ அல்லது பித்துக்குளித்தனத்திலிருந்தோ அன்றி தற்கொலையிலிருந்தோ காக்கிறது.
 எவரையும் அதிகாரம் செலுத்தாமலும், எவரிடமும் அடிபணியாமலும் இருப்பவர் எவரோ அவரே உண்மையில் பெரிய மனிதர்.

அவன் குற்றவாளிகளையும் தீர்க்கதரிசிகளையும் அழிப்பதாலேயே அவனையோர் சராசரியானவன் என்று எளிதாக நம்பிவிடமாட்டேன்.

இறுமாப்பெனும் பிணியுடனான காதற்பிணியே பொறுமையென்பது.

புழுக்கள் திரும்பலாம்; ஆனால் இரசிகங்களும் (யானைகள்) கூட விட்டுக்கொடுக்குமென்பது விநோதம் இல்லையா?

Thursday, February 7, 2013

வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போம்! (2)


பவள சங்கரி

 
நம் சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்க்கையை  அமைத்துக் கொள்வது மட்டுமே வெற்றிகரமான வாழ்க்கையின் பூரண இரகசியம். இந்த உண்மையை உணர்ந்தவர்கள் வாழ்வில் மலர்ச்சி நிச்சயம். – சுவாமி விவேகானந்தர்



 

வெற்றிப் பாதையில் பயணிக்க விரும்புபவர் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான ஒரு அம்சம், மனதில் சலனமில்லாத மகிழ்ச்சி. ஆம், தெளிந்த நீரோடை  போல மனது தெளிவாக இருக்க வேண்டுமானால் சில அடிப்படைக் கொள்கைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. இதில் மிக முக்கியமானதொன்று, இருப்பதை எண்ணி மகிழ்வுறாமல், இல்லாததை எண்ணி ஏக்கம் கொள்வது. ஆம், வாழ்க்கையில் அனைத்தும் எனக்குக் குறைவில்லாமல் கிடைத்தால்தான் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று எண்ணினால் இந்தப் பிறவியில் அது சாத்தியமில்லை. காரணம் குறையில்லாத மனித வாழ்க்கை என்பது இதுவரை இல்லை என்பதுதான் சத்தியம். நம்முடைய மகிழ்வான பொழுதுகளை முழுவதுமாக தின்னக்கூடிய வல்லமை பெற்றது, நம்மிடம் இல்லாத ஒன்றை எண்ணி ஏக்கம் கொண்டு நிம்மதியைத் தொலைப்பதுதான். மகிழ்ச்சி என்பது என்றுமே இன்னொருவரால் வரக்கூடியது அன்று. நமக்காக நாமே உருவாக்கிக்கொள்வதே நிலையான மகிழ்ச்சி. மகிழ்ச்சியோ, துக்கமோ இதில் எதைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம்  என்பது நம்மிடமே உள்ளது.

Monday, February 4, 2013

மணலும் (வாலிகையும்) நுரையும் (10)


Sand And Foam - Khalil Gibran (10)

பவள சங்கரி


அவனுடைய சதைப்பிண்டத்திற்கு ஏறுதல் கடினமாவதுடன் அச்சுமை அவனுடைய பாதையையும் நீண்டதாக்கும்.
மேலும் உம்முடைய உணங்குதலில், அவனுடைய பிண்டம் மேல்நோக்கி புடைத்துக் கொண்டிருப்பதைக் கண்டால், அவனுக்கோர் அடி எடுக்க உதவும்; அது உம்மை மேலும் துரிதமாக்கும்.

ஒருவரைப் பற்றிய உம்முடைய அறிதலுக்கப்பால் எவரைப் பற்றியும் உம்மால் எடைபோட இயலாது, மேலும் உம்முடைய ஞானம் எத்துனை சிறிதன்றோ.

யான் அடக்குமுறைக்குப் போதிக்குமோர் வெற்றிவீரனுக்குச் செவி கொள்வதில்லை.

பிணைக்கப்பட்ட செடகச் சுமையை பொறுமையாகத் தாங்குபவன் எவனோ அவனே உண்மையான சுதந்திர மனிதன்

Saturday, February 2, 2013

வெற்றிக்கனியை எட்டிப் பறிப்போம்! (1)


பவள சங்கரி


 
’நாம்’ நாமாகவே இருப்பதற்கு நம் எண்ணங்களே காரணம். நெஞ்சில் உரமும், நேர்மைத் திறமும் நம்மை நல்வழிப்படுத்தி, வெற்றிக்கனியை எட்டிப் பறிக்கச் செய்யும் என்ற நம்பிக்கை உடையவர் நீங்கள் என்பது உண்மையானால் இத்தொடர் உங்களை அக்காரியத்தை மென்மேலும் ஊக்குவிக்க வல்லது என்பது சத்தியம். நம்பிக்கை என்ற ஒன்றே வாழ்க்கையில் நம்மை உயரத்திற்கு இட்டுச் செல்லக்கூடியது. நம் எண்ணங்கள் மேம்படும்போது நம் வாழ்க்கைத் தரமும் உயரும். நம் எண்ணங்களை எப்படி மேம்படுத்தப் போகிறோம் என்பதையே இத்தொடரில் விவாதிக்கப் போகிறோம். நல்ல எண்ணங்கள் மட்டுமே நம் சுய வல்லமையை ஊக்குவிக்கும் ஒரு உன்னத காரணி.

 உறுதியான எண்ணத்தால் உயர்ந்து நிற்போம்!

காகத்தின் நுண்ணறிவு!

  காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...