Saturday, June 2, 2012

எளிமையும்.. வலிமையும்!


ஒருபிடி சோற்றுக்கு
ஒருநூறு காக்கைகள்
ஓரொரு பருக்கையாய்
ஓடிஓடி கொரிக்க
கூடிக்கூடி சமத்துவமும்
பாடிப்பாடி தத்துவமும்
நாடிநாடி களித்திருக்க
கோடிக்கோடி தானியங்களைக்
குடைந்து குடைந்து
குதூகலமாய் சேகரித்து
குற்றேவல் புரியும்
குழுவிற்கும் சிறுபங்கிட்டு
திருப்தியாய் கொண்டாடி
திட்டமிட்டு சிலம்பாடி
திருவாசகமாய் மலர்ந்தருளி
கனிரசமாய் கற்கண்டாய்
கருத்துகள் பரிமாறி
கசப்பையும் கச்சிதமாய்
உவர்ப்பையும் உற்சாகமாய்
உரைப்பையும் உறுதியாய்
உல்லாசமாய் உடமையாக்கி
பச்சைப்பொய்கள் பலபேசி
பச்சைக்கிளியின் முகமூடியில்
பகட்டாய்த் திரியும்
பருந்துக் கூட்டம்!

in and out chennai publication: Thankyou.

3 comments:

  1. எளிமையும்.. வலிமையும்!
    பச்சைக்கிளியின் முகமூடியில்
    பகட்டாய்த் திரியும்
    பருந்துக் கூட்டம்!

    பொருத்தமான தலைப்புடன் கனமான ஆக்கம்..

    ReplyDelete
  2. நல்ல கவிதை பவளா. இன் அண்ட் அவுட் சென்னை வெளியீட்டுக்கு வாழ்த்துகளும்.

    ReplyDelete
  3. தலைப்பும் கவிதையும் போட்டி போடுது.நல்லாயிருக்கு பவளா !

    ReplyDelete