Thursday, September 6, 2012

இன்று புதிதாய்ப் பிறந்தேன்!

செப்டம்பர் 4 என் பிறந்த நாள் என்பதை என்னைவிட எம் உயிருக்குயிரான நட்புகள் அறிந்து வைத்திருப்பதுதான் ஆச்சரியம். இந்த முறை என் பிறந்தநாளை மறக்கவே முடியாமல் செய்துவிட்டனர் நம் இணைய நடபுக்கள்.   அமைதிச்சாரல் சாந்தி எப்படியோ கண்டுபிடித்து முகப்புத்தகத்தில் கேக்கும், பொக்கேவும் கொடுத்து வாழ்த்த , ஈரோடு வலைப்பதிவர் குழுமத்தில் ஈரோடு கதிர், பவள சங்கரி அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று ஆரம்பிக்க மளமளவென நம் ஈரோடு சொந்தங்கள் வாழ்த்துக்களை குவித்துவிட்டனர்.  அடுத்து, எண்ணங்களை அன்பு வண்ணங்களாக வழங்கிக் கொண்டிருக்கும்  கீதாஜி குழுமங்களில் அறிவிக்க, இணைய நட்புக்களின் வாழ்த்து மழையில் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறேன். இதைவிட வேறு என்ன பேறு வேண்டும். பிறக்கும் போதும் ஒன்றும் கொண்டுவரவில்லை.  போகும் போதும் எதையும் உடன் எடுத்துச்செல்ல முடியாது. இந்த இடைப்பட்ட காலத்தில் நல்ல அன்பையும், நட்பையும் சம்பாதிப்பது எத்துனை பெரிய தவம் என்பதை உணர வைத்த பிறந்தநாள் இது. அப்பப்பா.. அம்மா, சகோதரி, தோழி என்று எத்துனை உறவுகள்! மனம் முழுமையாக நிறைவு கண்டுவிட்டது. இவர்களுக்கெலலாம் நான் என்ன செய்தேன், அல்லது இனிதான் என்ன கைமாறு செய்ய முடியும்? நன்றி என்ற ஒரு வார்த்தை மட்டுமே என்னால் முடிந்தது. அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று மனமார பிரார்த்தனை செய்ய முடிகிறது. குறிப்பாக மறவன்புலவு சச்சிதானந்தன் ஐயா, ஹரிகி சார், அன்பினிய தோழி ஷைலஜா, இவர்களெல்லாம் வாழ்த்துப்பா பாடிக்கொடுத்தார்களே.. இதற்கு தகுதி வாய்ந்தவள்தானா என்ற ஐயப்பாடு இன்னும் தீரவில்லை. எல்லாம் அவன் செயல் வேறு என்ன சொல்ல..
 
 
 
 
ஐயா, மறவன்புலவு க.சச்சிதானந்தன் - பல்துறை வித்தகர். பதிப்புத் துறையிலும் சைவத் திருமுறைகளிலும் ஆழ்ந்து தோய்ந்தவர். அதே நேரம், கடலியல் துறையில் பழுத்த அனுபவம் வாய்ந்த வல்லுநர். கொழும்பு கடற்றொழில் ஆராய்ச்சி நிலையத்தின் ஆய்வு அலுவலராக 11 ஆண்டுகள் பணியாற்றியவர். 23 நாடுகளில் ஐ.நா. உணவு வேளாண் நிறுவன ஆலோசகராகச் சுமார் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். கருவாடுகளைக் காயவைத்தல் தொடர்பாகப் புதிய முறைகளை உருவாக்கியவர். சேதுக் கால்வாய்த் திட்டம் தொடர்பான புரிதலைப் பல நிலைகளில் உருவாக்க முனைந்தவர். கூர்மையான நோக்கும் அறிவியல்பூர்வமான அணுகுமுறையும் கொண்டவர்.



Maravanpulavu K. Sachithananthan tamilnool@gmail.com
 



கவளம் தமிழ் உண்டால் காயம் மெய்க்கும் காலம் பொய்க்கும்
தவளும் தகைமை தழுவித் திகழும் புகழே உலகாய்க் குவியும்
இவளும் மின்தமிழ் வல்லமை மின்னிதழ்த் தமிழாள் என்பதால்
பவளம் கொழித்துப் பல்லாண்டு செழித்து வாழ்வார் பவளநம் சங்கரியே.


இது கவிஞர் திரு ஹரிகிருஷ்ணன் அவர்கள் எமக்களித்த வாழ்த்துப்பா.

வெண்தவளப் புன்முறுவல் வீரமா சக்தியின்பேர்
பெண்துவளத் தான்சுமந்த பேறென்னே! - எம்பவள
சங்கரியாள் தோன்றிய தங்கத் திருநாளை
இங்கரியான்* வாழ்த்தல் இயல்பு!

*இங்கரியான் = இங்கு அரி யான்.

என் அன்பினிய தோழி நாவலாசிரியை, கவிதாயினி, பிரபல எழுத்தாளர் திரு ராகவன் அவர்களின் தவப்புதல்வி, திருமதி ஷைலஜா அவர்கள் அளித்த வாழ்த்துப்பா.

வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க
shylaja shylaja01@gmail.com
7:24 PM (11 hours ago)


அன்புக்கு மறுபெயரே
ஆற்ற்லில் வல்லவரே
இன் மொழி உரைப்பவரே
ஈரோட்டில் வாழ்பவரே
உள்ளத்தில் நல்ல உள்ளம்
ஊக்கப்படுத்தும் பலரை
எந்நாளும் அது பவழாக்கு
ஏற்றமுடனே உண்டு
ஐங்கரன் அருளோடு
ஔவை வளர்த்த தமிழில்
படைப்புகள் பல அளிக்க!
பல்லாண்டு வாழ்க தோழி!

தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொன்ன இனிய நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

அன்புடன்
பவள சங்கரி





No comments:

Post a Comment