Thursday, September 6, 2012

கதையே கவிதையாய்! - வழி





 வழி - கலீல் ஜிப்ரான்

குன்றுகளின் மத்தியில், தம் தலைப்பிள்ளையான ஒரே மகனுடன் வாழ்ந்து கொண்டிருந்தாள் ஓர் பாவை.
  மருத்துவர் ஆங்கே நின்று கொண்டிருக்கையிலேயே, அக்குழந்தை இறந்தது ஓர் காய்ச்சலினால்.
  அந்தத் தாயவள் வேதனையினாலே. மனம் குழம்பிப் போனாள்  அம்மருத்துவரிடம், “சொல்லுங்கள், சொல்லுங்கள் அவனது செயல்களை முடக்கிப்போட்டதோடு, அவனுடைய இனிய கானத்தையும்  அமைதியாக்கியது எது?” என்று பதறினாள்.
  அந்த மருத்துவரோ, ”அது அந்தக் காய்ச்சல்தான்என்றார்.
  மேலும் அந்தத் தாய், “ஏன் அந்தக் காய்ச்சல்?” என்றாள்.
  அதற்கு அம்மருத்துவர், “எம்மால் அதை விளக்க இயலாது. அது அந்த உடலுக்கு வரும் ஒரு மீச்சிறு மெய்ம்மை, மேலும் நம் மனிதக் கண்களால் அதைக் காண இயலாது”, என்று பதிலளித்தார்.
  பின்னர் அம்மருத்துவர் அவளை விட்டகன்றார். மீச்சிறு மெய்மையதை, நம் மனிதக் கண்களால் காண இயலாது”. என்பதை தமக்குள்ளேயே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாள்.
  மேலும் மாலையில் அவளுக்கு ஆறுதல் அளிக்கும் பொருட்டு பாதிரியார் வந்தார். அவள் கதறி அழுதுகொண்டே, “ஓ... நான் ஏன் என் மகனை இழந்தேன், என் ஒரே மகன், என் தலைமகன்?” என்று அரற்றினாள்.
  மேலும் அந்த பாதிரியார், “மகளே, அது அந்த ஆண்டவனின் விருப்பம்என்று பதிலளித்தார்.
  மேலும் அப்பெண், “எது கடவுள் மற்றும் எங்கிருக்கிறார் கடவுள்? யான் அவர் முன்னால் என் மார்பைக் கிழித்துக் கொண்டு பீரிட்டு வரும் எம் இருதயத்தின் குருதியை அவர் பாதத்தில் சமர்ப்பித்தாலாவது  அவரைக் காண இயலுமா. எங்கே அவரைக் காண இயலும் என்று கூறுங்கள்”. என்றாள்.
  மேலும் அந்த பாதிரியார், “ஆண்டவர் எல்லையற்ற பரந்த வெளியில் நீக்கமற நிறைந்திருப்பவர். நம்முடைய புறக்கண்களால் அவரைக் காண இயலாது”, என்றார்.
  பின்னர் அப்பெண், “எல்லையற்ற பிரம்மாண்டத்தின் விருப்பத்திற்காக, மீச்சிறுமையான ஒன்று எம் மகனைக் கொன்றுவிட்டது! பின்னர் நாம் யார்? நாம் யார்?” என்று கதறினாள்.
  அந்நேரத்தில் இறந்த அந்த உடலுக்கு கோடித்துணியுடன் அந்த அறைக்குள் வந்தாள் அப்பெண்ணின் தாய். வந்தவள் பாதிரியாரின் மொழிகளையும், தம் மகளின் கதறலையும் செவிமடுத்தாள் மேலும் அவள் அந்தக் கோடித்துணியை கீழே வைத்துவிட்டு, தம் மகளின் கரத்தை ,தம் கரத்தினுள் எடுத்துக்கொண்டு, “எம் மகளே, மீச்சிறுவோரும் மற்றும் மிக உயர்ந்தோரும் நாமேதான். மேலும் அந்த இரண்டிற்கும் இடைப்பட்ட வழியும் நாமேதான்”. என்றாள்.


THE PATH

There lived among the hills a woman and her son, and he was her first-born and her only child.

And the boy died of a fever whilst the physician stood by.

The mother was distraught with sorrow, and she cried to the physician and besought him saying, “Tell me, tell me, what was it that made quiet his striving and silent his song?”

And the physician said, “It was the fever.”

And the mother said, “What is the fever?”

And the physician answered, “I cannot explain it. It is a thing infinitely small that visits the body, and we cannot see it with the human eye.”

The physician left her. And she kept repeating to herself, “Something infinitely small. We cannot see it with our human eye.”

And at evening the priest came to console her. And she wept and she cried out saying, “Oh, why have I lost my son, my only son, my first-born?”

And the priest answered, “My child, it is the will of God.”

And the woman said, “What is God and where is God? I would see God that I may tear my bosom before Him, and pour the blood of my heart at His feet. Tell me where I shall find Him.”

And the priest said, “”God is infinitely vast. He is not to be seen with our human eye.”

Then the woman cried out, “The infinitely small has slain my son through the will of the infinitely great! Then what are we? What are we?”

At that moment the woman’s mother came into the room with the shroud for the dead boy, and she heard the words of the priest and also her daughter’s cry. And she laid down the shroud, and took her daughter’s hand in her own hand, and she said, “My daughter, we ourselves are the infinitely small and the infinitely great; and we are the path between the two.”

No comments:

Post a Comment

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...