தனிமையின் இனிமை!                                        நன்றி : ஓவியம் - திரு ஆர்,எஸ்.மணி

இயலாது என்று சொல்லும்
இம்சையைக் கொடுக்காதே
இயல்பாய் இருக்கும் இனிமை
இங்கிதமாய் நீளும் தனிமை!

நாளும் ஒரு பாடமடி
நிதமும் ஒரு முகமூடி
நகலும் அசலும் உறவாடி
கருமமேக் கண்ணாயினர்.

ஆர்ப்பரிக்காத அமைதி
உள்ளக் கொந்தளிப்பின்
உச்சம் உலர்ந்த சுவாசம்
உயிரில் கலந்த உன்னதம்!

அமைதியான நதியின் ஓடம்
அளவில்லாத கருணை ஈரம்
பிழையில்லாத வான் மேகம்
பிரிவறியாத புள்ளின் நேசம்!


Comments