Thursday, February 13, 2014

கவிக்குயிலின் கவி முகம்! (2) - சரோஜினி நாயுடு


பவள சங்கரி

இன்று கவிக்குயிலின் 135 வது பிறந்த தினம்! 

சரோஜினி நாயுடு (1879 – 1949) இந்திய ஆங்கிலக் கவிஞர், சுதந்திரப் போராட்ட வீரர், பெண்ணுரிமை, அரசியல் ஆர்வலர், சொற்பொழிவாளர், மற்றும் நிர்வாகி இந்திய தேசிய காங்கிரஸ் முதல் பெண் தலைவர், மற்றும் முதல் இந்திய மாநில கவர்னராக இருந்தவர். இளமையில் எளிதில் உணர்ச்சிவயப்படுகிற ஒரு பெண்ணாகவும் இருந்திருக்கிறார்.

மெல்லிய இதயமும்பளிச்சென்ற கருத்துகளும் கொண்ட ஆங்கில கலாச்சாரமும்,இந்தியக் கலாச்சாரமும் ஒருங்கே அமையப்பெற்ற கவிக்குயிலின் பாடல்களில்,டெனிசன்ஷெல்லி மற்றும் எலிசபெத் பேரட் பிரௌனிங் ஆகிய ஆங்கிலக் கவிஞர்களின் தாக்கமும் இருந்தது. மிகுந்த கற்பனை வளமும்தாள லயமும்இசை வடிவமும்காதல்பிரிவுஏக்கம்இறப்பு,வாழ்வின் அற்புதங்கள் என்று அனைத்து ஆழ்மன உணர்வுகளையும் அழகு கவிதைகளாக்கும் வல்லமை பெற்றவரானார்.இந்திய அரசும் கேசரி ஹிந்த்’ என்னும் சிறப்பு வாய்ந்த பதக்கத்தைக் கொடுத்து அம்மையாரைக் கௌரவித்தது.

Corn Grinders

O little mouse, why dost thou cry
While merry stars laugh in the sky?


Alas! alas! my lord is dead!
Ah, who will ease my bitter pain?
He went to seek a millet-grain
In the rich farmer's granary shed;
They caught him in a baited snare,
And slew my lover unaware:
Alas! alas! my lord is dead.



O little deer, why dost thou moan,
Hid in thy forest-bower alone?


Alas! alas! my lord is dead!
Ah! who will quiet my lament?


At fall of eventide he went
To drink beside the river-head;
A waiting hunter threw his dart,
And struck my lover through the heart.
Alas! alas! my lord is dead.


O little bride, why dost thou weep
With all the happy world asleep?


Alas! alas! my lord is dead!
Ah, who will stay these hungry tears,
Or still the want of famished years,
And crown with love my marriage-bed?
My soul burns with the quenchless fire
That lit my lover's funeral pyre:
Alas! alas! my lord is dead.



மொழிபெயர்ப்பு

சோள அரவை


ஓ என் செல்ல எலிக்குஞ்சே, ஏன் கரைகிறாய் நீ
விண்மீன்களெல்லாம் களிப்பில் கரைந்திருக்கும்போது?

ஐயகோ! ஐயகோ! எம் இறை இறந்ததுவே!
ஓ!  எம் கடுகடுப்பைத் துடைப்பார் எவர் உளர்?
சென்றானே அவனோர் தானிய மணியைத் தேடி
செழிப்பான உழுநரின் தானியக் களஞ்சியம் நாடி;
மாட்டிக் கொண்டானவன் தூண்டில் பொறியாய்,
எம் அன்புக்குரியவனோ அறியாமையின் உச்சத்தில்;
ஐயகோ! ஐயகோ! எம் இறை இறந்ததுவே.

ஏனிந்த அரற்றல் ஓ என் செல்லக்குட்டி மானே,
வனக்கொடிப் பந்தலினூடே தனிமையில் ஒளிந்தாயோ?

ஐயகோ! ஐயகோ! எம் இறை இறந்ததுவே!
ஓ! எவர் வந்து அமைதியாக்குவார் எம் அரற்றலை?

முயங்குமாலைப் பொழுதில் சென்றானவன்
ஆற்றங்கரையோரம் நீர் அருந்தவே;
காத்திருந்த வேடனவன் துள்ளிக்குதித்தான் திடுமென,
எம் அன்பரின் இதயக்கூட்டையேத் தாக்கினானவன்.
ஐயகோ! ஐயகோ! எம் இறை இறந்ததுவே.

ஓ எம் மணப்பெண்ணே, ஏன் விசும்புகிறாய் நீ
அனைத்துலகும் மகிழ்ந்துறங்கும் இவ்வேளையில்?

ஐயகோ! ஐயகோ! எம் இறை இறந்ததுவே!
ஓ, கனல்கக்கும் இந்த கண்ணீரைத் தாங்குபவர் எவர்,
அன்றி இன்னும் தீராப்பசியின் நீட்சியின் விருப்போ,
அன்பினால் கிரீடமிடு எம் திருமண பஞ்சணைக்கு?
தணியாத் தணலில் வேகும் எம் ஆன்மா
அதுவே ஆகும் எம் அன்புக்குரியவனின் சிதைமூட்டும் தீயாகவே;
ஐயகோ! ஐயகோ! எம் இறை இறந்ததுவே.



2 comments:

  1. வரிகள் வேதனையுடன் கனல் கக்குகிறது...

    தமிழாக்கம் அருமை... நன்றி...

    ReplyDelete
  2. அருமையான பல தகவல்களை அற்புதமாக தமிழில் தந்துள்ளீர்கள். படிக்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete