Thursday, September 11, 2014

பாரதியும் ஓர் புத்தனே!

பவள சங்கரி



லட்சியமே சுவாசமாக
கொண்ட
கொள்கையே வேதமாக
விடுதலைப்புள்ளின் விவேகத்தோடு



பாவலரின் உள்ளச் சிம்மாசனத்தில்
சம்மனமிட்டு
வெற்றிமுரசை பாரெங்கும் பரவவிட்டு
பித்தம் கொள்ளச்செய்யும் புத்தனவன்!

நதி வெள்ளப் பிரவாகத்தின் 
மதிவெல்ல
மாதவம் மனதிலேகி விதிவெள்ளம்
சூரையாடும் சூதைவென்ற சித்தனவன்!

காக்கை குருவி எங்கள் சாதியென
இனமறியா
இன்பவூற்றை இயல்பாய்ச்சொல்லி
களியாட்டம் போடச்செய்த ஞானியவன்!

மனிதநேயமெனும் தூரிகையால்
வண்ணங்கொண்டு
வானளாவத் தீட்டியவவைகள்
தீதின்றி திண்ணமாய் இன்றும்

உச்சிமீது வானிடிந்து வீழந்தபோதும்
அச்சமின்றி
துச்சமென சுடரையேந்தி வலிமையை
ஏழ்மையிலும் ஒளிரச்செய்த மாவீரன்!

அமரப்பொழுதிலும் அரியணையைத்
துறக்காத
ஒளிக்கனலாய் மின்னும் கண்ணோடு
புவியனைத்தையும் மண்டியிடவைத்தவன்!

பரிதிக் கிரணங்களாய் பாரினை
ஒளியூட்டி
அடிமைத்தளையை சுட்டெரித்து
சோதிவடிவாய் சுடர்வோனே!!

2 comments:

  1. அடிமைத்தளையை சுட்டெரித்து
    சோதிவடிவாய் சுடர்வோனே!!

    பாரதி நினைவலைகள் அருமை.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க மேடம்.

      அன்புடன்
      பவளா

      Delete