Thursday, November 13, 2014

மாமரத்துப் பூவு!


பவள சங்கரி


இசைச்சாரலில் நனைந்த தென்றல் காற்று
பாடுது பாட்டொன்னு தேனாய்ப் பொழிந்து
வீசிய தென்றலின் இளங்குளிரில் இதமாய்
மலர்ந்ததொரு மாமரத்துப் பூவு 

இசைச்சாரலில் நனைந்த தென்றல் காற்று
பாடுது பாட்டொன்னு தேனாய்ப் பொழிந்தே
வீசிய தென்றலின் இளங்குளிரில் இதமாய்
மலர்ந்ததொரு மாமரத்துப் பூவு 
பாடுது பாட்டொன்னு தேனாய்ப் பொழிந்தே

காலம் காலமாய் காத்திருந்தாலும் காததூரத்தில்
கனிந்திருந்தாலும் வேதம் என்று மலைத்திருந்தாலும்
மலையாய் மோதும் கீதம் வென்றாலும் 
அலைஅலையாய் அதிர்ந்திருந்தாலும் ஆதவனேயானாலும்
அடக்காத குளிர்தான் இதமான பாடல்தான்
ஆராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா
வான்பறந்த தேன்சிட்டு எந்நாளும் வாராதம்மா!

இசைச்சாரலில் நனைந்த தென்றல் காற்று
பாடுது பாட்டொன்னு தேனாய்ப் பொழிந்தே
வீசிய தென்றலின் இளங்குளிரில் இதமாய்
மலர்ந்ததொரு மாமரத்துப் பூவு 

கோயில் கொண்ட சிற்பம் மீளாது எந்நாளுமது
மையல் கொண்ட மாதுளை தாளாத சந்தமது
தந்தன தந்தன தாளம் கேட்டும் அசையாத சிற்பமது
மாளாத பாசங்களும், நேசங்களும் அலங்காரமாய்
பவனிவரும் தங்கத்தேரில் பொன்னூசல் ஆடுமனசு
இசையருந்தும் மனசது மலரும் அரும்பாகும்
மாலையாய் சூடும் தென்றல் மகிழ்ந்தாடும் நிதமும்
கவிபாடும் கணந்தோறும் புவியேழும் பொலிவாகும்

இசைச்சாரலில் நனைந்த தென்றல் காற்று
பாடுது பாட்டொன்னு தேனாய்ப் பொழிந்தே
வீசிய தென்றலின் இளங்குளிரில் இதமாய்
மலர்ந்ததொரு மாமரத்துப் பூவு 



2 comments: