இந்தியாவின் மொழிகள் நிலை1961ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் புழக்கத்தில் உள்ள மொழிகளின் எண்ணிக்கை 1,652 என்று கண்டறியப்பட்டுள்ளன.
1971ஆம் ஆண்டின் கணக்கெடுப்பில், 10,000 மக்களுக்கும் குறைவாகப் பேசப்படும் மொழிகளைத் தவிர்த்து 108 மொழிகளை மட்டும் பட்டியலிட்டிருக்கிறார்கள். மற்ற மொழிகள் “மற்றவைகள்” என்று பட்டியலிடப்பட்டுள்ளன.
1991ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, தனிப்பட்ட இலக்கண அமைப்புகளுடன் கூடிய மொழிகளாக 1,576 மொழிகளைக் கண்டறிந்து வெளியிட்டுள்ளது.
2001ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள மொழிகளின் எண்ணிக்கை 1,721. அதில் 122 முக்கியமான மொழிகள் மட்டுமே பெரும்பாலான மக்கள் பயன்படுத்துகிறார்கள். மற்ற 1,599 மொழிகள் சிறுபான்மை சமூகத்தினர், உள்ளூர் குழுக்கள், பழங்குடிகள் போன்றவர்கள் பயன்படுத்தக்கூடியவைகள்.
முக்கியமான 122 மொழிகள் 10,000 ற்கும் அதிகமான பயனாளிகள் உள்ளனர். இதில் 29 மொழிகள் மட்டுமே 1 மில்லியன் மக்களின் புழக்கத்தில் உள்ளன.
2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 122 மொழிகள் மட்டுமே 10,000 ற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்துவதாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில் இந்தியா 250 மொழிகளை இழந்துள்ளது.  இன்று 880 மொழிகள் வழக்கில் உள்ளன. 29 மொழிகள் 1 மில்லியன் மக்களுக்கும் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அருணாசலப் பிரதேசத்தில் மட்டும் அதிகபட்சமாக 90 மொழிகள் வழக்கில் உள்ளன!

Comments

Popular posts from this blog

உறுமீன்

யானைக்கும் அடி சறுக்கும்.............

கண்ணதாசனின் ‘சேரமான் காதலி'