அன்பு நண்பர்களே,
வணக்கம். பல நேரங்களில் நாம் செய்யும் காரியங்கள் அனைத்தும் சரியா, அல்லது நாம் போகும் பாதைதான் சரியா என்ற எந்தவிதமான சிந்த்னையும் இல்லாமலே ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் நீ போவது சரியான பாதைதான் என்று ஒரு அங்கீகாரம் கிடைக்கும் போது உள்ளம் குளிரத்தான் செய்கிறது. அதுவும் நல்ல நட்புகள் மனதார வாழ்த்தும் போது மகிழ்ச்சி பொங்கத்தான் செய்கிறது. மேலும் ஏதாவது செய்ய வேண்டும் என்று உள்ளம் பரபரக்கிறது. எல்லாம் இறைவன் செயல் அல்லவா?
என் இனிய தோழி , தமிழ் மரபு அறக்கட்டளையின் துணைத்தலைவர் திருமதி சுபாஷிணி ட்ரெம்மல் அப்படி எனக்குக் கிடைத்த ஒரு அங்கீகாரததின் தருணத்தில் உடன் இருந்து என்னை மகிழ்ச்சியுறச் செய்ததோடு அதனை அழகாக குழுமத்தில் வெளியிட்டதற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
முன்னாள் மத்திய அமைச்சர் திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள் மிகச் சிறந்த மனிதாபிமானி. பெண்கள் முன்னேற்றத்தில் தனிப்பட்ட அக்கறை கொண்டவர். தம்முடைய இடைவிடாத பணிகளுக்கிடையேயும் இந்த நிகழ்ச்சியை ஒப்புக்கொண்டு தில்லியிலிருந்து வந்த களைப்பு தீருமுன் பறந்து வந்து நிகழ்சியில் கலந்து கொண்டதாக தலைவரும், நிகழ்ச்சி அமைப்பாளரும், ஈரோடு பசுமை இயக்கத் தலைவருமான திரு டாக்டர் ஜீவானந்தம் அவர்கள் கூறியது நெகிழ்ச்சியான விசயமாக இருந்தது.