Sunday, August 23, 2015
Monday, August 17, 2015
முச்சல்லடை சோதனை ? நட்பின் இலக்கணமா?
பவள சங்கரி
கிரேக்க நாட்டு பேரறிஞர் சாக்ரடீசு மிகப்பெரும் தத்துவவாதியும் கூட. ஒரு நாள் ஏற்கனவே பரிச்சயமான ஒருவர் சாக்ரடீசிடம் வந்து,
“உங்கள் நண்பரைப் பற்றி நான் கேள்விப்பட்ட ஒரு செய்தியை சொல்லவா?” என்றார்.
“ஒரு நிமிடம் பொறுங்கள்”, என்றார் சாக்ரடீசு. “என்னிடம் நீங்கள் எதுவும் சொல்வதற்கு முன்னால் ஒரு சிறு சோதனை உங்களுக்கு. முச்சல்லடை சோதனை என்று பெயர் இதற்கு, சரியா”
“முச்சல்லடை சோதனையா?”
Friday, August 14, 2015
Saturday, August 8, 2015
அடியாரும், ஆன்மீகமும் – 4 – பூசலாரும், ராமானுசரும்!
பவள சங்கரி
ஒருவரின் செயல்திட்பம் சரியாக அமைய வேண்டுமாயின் அவருக்கு நற்சிந்தைகளுடனான நிலையான மனத்திட்பம் அவசியமாகிறது. அந்த வகையில் அடியார்களின் மனத்திட்பத்தின் மகிமை பெரிதும் சிந்தித்து உணர்ந்து போற்றத்தக்கது. தாயுமானவரின், “காடுங் கரையும் மனக்குரங்கு கால்விட்டோட அதன்பிறகே ஓடுந் தொழிலாற் பயனுளதோ” என்ற பதத்தின் மூலமும் இதனை அறியலாம். ஆணித்தரமான அத்தாட்சிச் சாதனங்களைப் பெற்றுள்ள திருத்தொண்டர் புராண வரலாறுகளுள் முக்கியமானதாகக் கருதப்படுவது பூசலார் நாயனார் வரலாறு.
பொருவருந்தண் டகநாட்டு நின்ற வூர்வாழ்
பூசுரர்கோப் பூசலார் பந்தி யாலே
யிருநிதியந் தேடியா லயமு மாக்கி
யெழுந்தருளப் பண்ணுவதா வெண்ணுங் காலை
யரனதனைக் காடவர்கோற் கருள மன்ன
னந்நகர மணைந்தவ்வா றறிந்து தாழ
விரவுமனக் கோயிலுற விருத்தி யங்கண்
வேண்டுவகொண் டிறைஞ்சியருண் மேவி னாரே.
பூசுரர்கோப் பூசலார் பந்தி யாலே
யிருநிதியந் தேடியா லயமு மாக்கி
யெழுந்தருளப் பண்ணுவதா வெண்ணுங் காலை
யரனதனைக் காடவர்கோற் கருள மன்ன
னந்நகர மணைந்தவ்வா றறிந்து தாழ
விரவுமனக் கோயிலுற விருத்தி யங்கண்
வேண்டுவகொண் டிறைஞ்சியருண் மேவி னாரே.
Wednesday, August 5, 2015
அடியாரும் ஆன்மீகமும் (5) – விஞ்ஞானமும், மெய்ஞ்ஞானமும்!
பவள சங்கரி
இந்து மதத்தில், ஆன்மீகம் என்பது வெறும் பக்தி, வழிபாடு அல்லது மதம் சார்ந்த ஒரு விசயம் என்பதற்கும் மீறி, கூர்ந்து நோக்குங்கால் அறிவியல் சார்ந்த விசயமாகவும் காணமுடிகிறது. அதாவது மெய்ஞ்ஞானம் என்பது விஞ்ஞானம் சார்ந்ததே என்பதை உணர முடிகிறது. ‘இந்து’ என்ற வார்த்தைக்கு பல்வேறு பொருள்கள் உண்டு. அவைகளில் முக்கியமான ஒன்று, ‘ஒருவரை உற்சாகம் இழக்கச் செய்யும் அந்த ஒன்றை அழிப்பது’ என்பதாம். அந்த வகையில் நம்மை உற்சாகம் இழக்கச் செய்கிற அவநம்பிக்கை, சுயபச்சாதாபம், சோம்பல் போன்றவற்றை அழிக்கவல்லது என்று கொள்ளலாம். இதற்கு ஆதாரமாக இருப்பதே நடராசரின் திருமூர்த்தம். ஆம் நடராசரின் காலடியில் அமிழ்ந்து கிடக்கும் சூரன்தான் நம்மிடமிருந்து உற்சாகத்தைப் பறிக்கும் அந்த தீய சக்தி. ஆக, நடராசப் பெருமான் இந்து என்பதன் பொருளாகத் திகழ்பவர் என்று கொள்ளலாம் அல்லவா?
முறமா - சல்லடையா - எது சிறந்தது?
அந்தத் தாய்க்கு தம் இரண்டு பெண் குழந்தைகள் மீதும் சம அளவிலான பாசம் என்றாலும், மூத்தவளுக்கு, எப்பொழுதும் தம் அன்னை தமக்குப் பின்னால் பிறந்த இளையவளையே பாராட்டிப் பேசுகிறார்களே என்ற பொறாமை இருந்துகொண்டே இருந்தது. எதற்கெடுத்தாலும் அவளை உதாரணம் காட்டுவது மூத்தவளுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அம்மாவிடம் எப்போதும் சண்டை போட்டவாறு இருந்தாள். அன்று பொங்கல் திருநாள். தம் மகள்களுக்கு பரிசு கொடுக்க விரும்பிய தாய், அதில் சின்ன சோதனை வைக்க எண்ணி, ஒரு அறையில் இரண்டு பொருட்களை வைத்துவிட்டு, அதில் யார் எதைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அதற்குத் தகுந்த பரிசுதான் கிடைக்கும் என்று சொல்லியனுப்பினார். முதலில் மூத்தவளை அந்த அறைக்குள் அழைத்தார். அவள் வந்து பார்த்தபோது ஒரு புறம் மூங்கில் செதில்களால் உருவாக்கப்பட்ட முறமும், மற்றொரு புறம் பளபளவென மின்னும் பித்தளை சல்லடையும் இருந்தது. பார்வைக்கு பளபளவெனத் தெரிந்த அந்த பித்தளைச் சல்லடையை சற்றும் யோசிக்காமல் எடுத்து வந்தாள் மூத்தவள். சரி என்று சொல்லி அனுப்பிவிட்டு இளையவளைக் கூப்பிட்டு எடுக்கச் சொன்னார் அந்தத் தாய். அவள் சற்று நேரம் சிந்தித்தவள், மெல்லச் சென்று முறத்தை எடுத்து வந்தாள். மூத்தவளுக்கு நமட்டுச் சிரிப்பு. விலையுயர்ந்த பொருளை எடுத்த தனக்குத்தான் விலையுயர்ந்த பரிசு கிடைக்கப் போகிறது என்ற இறுமாப்பு அவள் கண்களில் தெரிந்தது. பரிசு தரும் நேரம் வந்தது. முறத்தை தேர்ந்தெடுத்த இளையவளுக்கு விலையுயர்ந்த பரிசும், சல்லடையைத் தேர்ந்தெடுத்த மூத்தவளுக்கு குறைந்த மதிப்பிலான பரிசுமே கிடைத்ததது... ஏன் தெரியுமா?
சல்லடையை விட முறம் ஏன் உயர்ந்தது தெரியுமா? சல்லடை நல்ல சுத்தமான பொருளை கீழே தள்ளிவிட்டு, கப்பியை தன்னிடம் சேமித்துக்கொள்கிறது... ஆனால் முறம் அப்படியில்லை. கழிவுகளை வெளியேற்றிவிட்டு, சுத்தமான நல்ல பொருளை மட்டும் தக்க வைத்துக்கொள்கிறது.. எது சிறந்தது நீங்களே சொல்லுங்களேன்...
Sunday, August 2, 2015
Subscribe to:
Posts (Atom)
காகத்தின் நுண்ணறிவு!
காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...

-
தமிழ்த்துறை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், சித்தா வேதா மையம், நியூ ஜெர்சி, அமெரிக்கா, சாந்தம் உலக...
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
-
உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...